TN Rain Alert: வீக் எண்ட் வெளிய போறீங்களா? காலை 10 மணி வரை மழை இருக்குமாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம்:
மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.08.2023 முதல் 01.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மாலையில் குளிர்ந்த காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு நகரின் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்ல்லூர், நாவலூர், திருவான்மியூர், அடையாறு, அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரம், மேடவாக்கம், ஆலந்தூர், கிண்டி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):
நுங்கம்பாக்கம் 21.0, மீனம்பாக்கம் 3.6, விஐடி (சென்னை) 16.0, காஞ்சிபுரம் கட்டப்பாக்கம் 42.0, திருவள்ளூர் 2.0, வேலூர் விரிஞ்சிபுரம் 26.5, செங்கல்பட்டு மேற்கு தாம்பரம் 4.0, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 25.5, சென்னை நந்தனம் 22.5, காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் 26.0, காஞ்சிபுரம் சத்தியபாமா பல்கலைக்கழகம் 11.0, திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை 58.5 மில்லிமிட்டர் அளவி மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
29.08.2023 மற்றும் 30.08.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
PM Modi: ’என்னை மன்னிச்சிடுங்க..’ மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..! என்ன காரணம்?