மேலும் அறிய

PM Modi: ’என்னை மன்னிச்சிடுங்க..’ மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..! என்ன காரணம்?

டெல்லியில் ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு

20 நாடுகள் அங்கம் வகிக்கும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பாக இருக்கும் ஜி20 அமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. இதனால் அந்த அமைப்பில் பல்வேறு கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஜி20 கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த் அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இப்படியான நிலையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதேசமயம் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் 2 நாட்கள் டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம் என்பதால், அதற்காக முன்கூட்டியே பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

சில தினங்களுக்கு தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி அந்த பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி20 உச்சிமாநாடு குறித்து பேசினார். அப்போது, “ஒட்டுமொத்த நாடும் ஜி20 உச்சிமாநாட்டை நடத்த உள்ள நிலையில், இதனை வெற்றியடைய செய்வதில் டெல்லி மக்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. விருந்தினர்கள் அனைவரும் டெல்லிக்கு வருகின்றனர். 

நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளில் போக்குவரத்து விதிகளில் மாற்றம் ஏற்பட்டு  செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதற்காக டெல்லி மக்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். இந்திய தேசியக்கொடி மிகவும் உயரத்தில் கர்வத்துடன் பறப்பதை உறுதி செய்யும் பொறுப்பு டெல்லி மக்களுக்கு உள்ளது' என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget