TN Rain Alert: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வேறு எந்த பகுதிகளில் மழை நீடிக்கும்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18.03.2023 மற்றும் 19.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
22.03.2023: கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெருங்குடி (சென்னை) 9, முகலிவாக்கம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), சென்னை விமான நிலையம் தலா 7, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 6, கொடைக்கானல் (திண்டுக்கல்), தரமணி ARG (சென்னை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) கொளப்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 5, எம்ஜிஆர் நகர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அம்மூர் (ராணிப்பேட்டை) தலா 4, சோத்துப்பாறை (தேனி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சென்னை நுங்கம்பாக்கம் தலா 3, கெத்தை (நீலகிரி), வாலாஜா (ராணிப்பேட்டை), கொடநாடு (நீலகிரி), ஆர்எஸ்எல்-3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
18.03.2023 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழையானது இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்து வந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வந்தது. ஆனால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.