TN Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. தமிழ்நாட்டில் இன்று மழை இருக்குமா? இன்றைய மழை நிலவரம் இதோ..
தமிழ்நாட்டில் வரும் 3 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
01.07.2023 மற்றும் 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகின்ற 3 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. திருவாரூர், சேலம், சிதம்பரம், ஏற்காடு, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லி மீட்டரில்)
ஏற்காடு (சேலம்) 14.0, கொடைக்கானல் (திண்டுக்கல்) 11.0, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 15.0, தொண்டி (ராமநாதபுரம்) 10.0, காரைக்கால் (KARAIKAL) 6.0, வால்பாறை (கோயம்புத்தூர்) 3.8, மீனம்பாக்கம் (சென்னை) 1.0, சிதம்பரம் (கடலூர்) 3.5, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 1.5, ஏற்காடு (சேலம்) 1.0, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 50.5, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 30.0, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 3.5, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 1.0, விருத்தாசலம் (கடலூர்) 7.5, வம்பன் (புதுக்கோட்டை) 4.5, கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்) 1.0 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை தென் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், கிண்டி, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், நாவலூர், தாம்பரம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் உஷ்ணம் தணிந்துள்ளது. அதிகப்படியான மேகக்கூட்டங்கள் நகரில் இருந்து கடலுக்கு சென்றதால் திடீர் மழை பதிவானதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.