மேலும் அறிய

Aadi Amavasai: மேல்மலையனூரில் ஆடி அமாவாசை திருவிழா... அம்மனை தரிசிக்க அசத்தல் ஏற்பாடுகள்

Aadi Amavasai 2024: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வரும் 4ஆம் தேதி அமாவாசை திருவிழா நடைபெறவுள்ளது.

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ள அமாவாசை திருவிழா மற்றும் திருவக்கரை அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில் பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் 04.08.2024 அன்று அமாவாசை திருவிழாவும் மற்றும் 19.08.2024 அன்று திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் பௌர்ணமி ஜோதி திருவிழாவும் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள், வள்ளலார் மடம், தற்காலிக பேருந்து நிலையங்கள், திருக்கோவிலுக்கு வரும் வழிகளில் அதிகளவில் குப்பை தொட்டிகளை அமைக்கவும், சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.

காவல்துறை சார்பில், பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதுடன், தற்காலிக பேருந்து நிலையங்கள், கிராம தெருக்கள், திருக்கோயில் வளாகம் மற்றும் இதர இடங்களில் திருட்டு, வழிப்பறி மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போதிய அளவில் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் நேரத்தில் திருக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் (ம) கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் எவரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கனரக வாகனங்கள் திருவிழா நாட்களில் செல்லாதவாறு கண்காணித்திட வேண்டும்.

மின்சார வாரியத்தின் சார்பில், திருக்கோயிலில் உள்ள மின் வழித்தடங்களை பார்வையிட்டு, சரிசெய்திட வேண்டும். மேலும், திருவிழா நாட்களில் மின் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாகனம் நிறுத்துமிடங்களில் போதிய மின்விளக்கு ஏற்படுத்தி வேண்டும். மேலும், திருக்கோவில் சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஆங்காங்கே குடிநீர் வசதிகள், தற்காலிக கழிப்பறை வசதிகள், கூட்டநெரிசலை தவிர்த்திடும் பொருட்டு தடுப்பு கட்டை வசதிகளை அமைத்திட வேண்டும்.

தீயணைப்புத்துறை சார்பில், திருக்கோயில் வளாகத்தில் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட வேண்டும். போக்குவரத்துறை சார்பில், சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்துவதோடு சாலை ஓரங்களில் நிறுத்தாமல் பேருந்து நிலையங்களில் மட்டுமே பேருந்து நின்று செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனைத்து இணைப்பு சாலைகளையும் இருவழி சாலையாக மாற்றிட வேண்டும்.

கனரக வாகனங்ளை தடுத்து நிறுத்திட வேண்டும். சுகாதாரத்துறை சார்பில், சுகாதார மருத்துவ குழுவுடன் அவசர ஊர்தியுடன் திருக்கோவில் வளாகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். உணவுத்துறை சார்பில், திருவிழா நடைபெறும் காலங்களில் திருக்கோவிலுக்கு வெளியே உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Embed widget