ஜூலை 1 முதல் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம்! புதிய விதிமுறைகள், இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?
பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணை டிசம்பர் 31, 2025க்குள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி 2026 முதல் அவர்களின் பான் அட்டை செயல்படாது.

ஜூலை 1 முதல் புதிய பான்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்ட உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
பான் கார்டு (PAN Card), அதாவது நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number), என்பது வருமான வரித் துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண். இது இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் 10 இலக்க எண். இது அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது.
தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்பு சான்றிதழ் அல்லது வேறு பிற அடையாள சான்றிதழ் இருந்தாலே பான்கார்டு விண்ணபிக்க முடியும். வரி ஏய்ப்பை தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடனும், ஜூலை 1 முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் எவரும், செல்லுபடியாகும் ஆதார் எண்ணை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதுவே விண்ணப்ப செயல்பாட்டின்போது முக்கிய சரிபார்ப்பு ஆவணமாக செயல்படும்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரித்தாக்கலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி இது என்று ஒரு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கொண்டு பான் கார்டு பெறலாம். ஆனால் இனி, வருமான வரித் துறையின் போர்ட்டல் வழியாக ஆதார் சரிபார்ப்பு மூலமே விண்ணப்பிக்க முடியும்.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணை டிசம்பர் 31, 2025க்குள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி 2026 முதல் அவர்களின் பான் அட்டை செயல்படாது. இந்த காலக்கெடு ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள், நிதிச் சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும், வேகத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று இணைக்க வேண்டும்.
அடையாளச் சான்றாகப் பயன்படுத்தத் தகுதியுடையவை:
ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, இந்திய கடவுச் சீட்டு,
முகவரிச் சான்றாகப் பயன்படுத்தத் தகுதியுடவை: ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொலைபேசி கட்டண ரசீது, கடவுச் சீட்டு, வீட்டு வரி ரசீது, ஆதார் கார்டு.
தற்போது ஆதார் அட்டையை மட்டும் கொண்டே பான்கார்டு விண்ணப்பிக்கலாம்
மேலும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டு முகவரி கொண்ட பிற சான்றுகளும் இதற்குத் தகுதியானவை.





















