(Source: ECI/ABP News/ABP Majha)
CM MK Stalin: கோயில் சொத்துக்கள் திருட்டா? - முதலமைச்சரை வழிமறித்து பாராட்டிய முதியவர் - வைரலாகும் வீடியோ
CM MK Stalin: இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் திருடப்படுவதாகக சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு தி.மு.க.-வைச் சேர்ந்தவர்கள் நிர்வாகிகள், அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம் செல்லும் வழியில் முதியவர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோயில்களின் சொத்துக்கள் திருட்டு
உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்ட்ட தென் தமிழக குடைவரை கோயில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை சொல்ல விழையும்போது அரசியல் நுழைகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் திருடப்படுவதாகவும், திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது எனத் தெரியவில்லை” என்று பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி ஆதாரம் இல்லாமல் பேசுவது சரியானது இல்லை என தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் நிர்மலா சீதாரமனின் கருத்திற்கு பதிலளித்துள்ள இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கோயில் சொத்துக்கள் திருடப்படுவதாக கூறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கான ஆதாரத்தை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
பாரட்டு வீடியோ
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைப்பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர். அவர் நடைப்பயணம் செல்லும்போது முதியவர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்துசமய அறநிலைய துறை குறித்து பாரடியுள்ள வீடியில் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் முதியவர் மு.க.ஸ்டாலினிடம் “ நிலத்தை யாரோ வைத்திருக்கிறார்கள். அதை மீட்டு பல்வேறு செயல்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை முன்னெடுத்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் கும்பாபிஷேம் என்பதே இல்லை. கோயிலுக்கு நிறைய செய்துட்டு இருக்கீங்க. நல்லது.. சேகர்பாபு நல்லா பண்றாரு.. ரொம்ப சந்தோஷம். ” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இதுவரை 1000 கோயில் கும்பாபிஷேசம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1001-வது கும்பாபிஷேசம் நடந்துள்ளது என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,” அண்ணாமலை போன்றோர் கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் நமது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டி தருகிறார். அதில் கோயில்களை நாம் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறோம் நாம் என பேசி இருக்கிறார். இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டு உள்ளது.5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் திமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தி உள்ளவர்கள் திமுக அரசை பாராட்டுவார்கள். நிர்மலா சீதாரமனுக்கு உண்மையிலேயே பக்தி இருந்திருந்தால் திமுக ஆட்சியை பாராட்டி இருக்க வேண்டும். நிர்மலா சீதாராமனுக்கு இருப்பது பக்தி இல்லை; அது பகல் வேஷம். நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற பகல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்” என சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்ற ’நினைவில் வாழும் திருமங்கலம் கோபால்’ மகன் திருமண விழாவில் பேசியுள்ளார்.