TN Rains | உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி...! 5 நாட்களுக்கு நீடிக்கப்போகும் கனமழை...!
தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மிகவும் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து வரும் 11-ந் தேதி வட தமிழகம் அருகே வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவுகம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே, பேரிடர் மீட்பு படையினர் பல பகுதிகளில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடற்கரையோரங்களில் வசித்து வருபவர்கள், வெள்ள அபாயத்தில் சிக்கியிருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பல செய்திகளை உடனுக்குடன் படிக்க : கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை – சாலைகளில் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரம்..!
நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழைப்பொழிவு பதிவானது. இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மிதப்பதுடன் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை உடனுக்குடன் படிக்க : இடுப்பளவு தண்ணீரில் கல்யாண சீர்வரிசை.! ஆபத்தை உணராமல் ரிஸ்க் எடுக்கும் கடலூர் கிராம மக்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்