மேலும் அறிய

ஸ்மார்ட் ரேஷன் கார்டு: 2 மாதத்தில் 7 லட்சத்தை கடந்த விண்ணப்பங்கள்!

விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்திருந்தது.

கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதன் மூலம் அரசின் பல சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கிறது. கொரோனா நிவாரண நிதி முதல் அரசின் பல்வேறு திட்டங்களை சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ரேஷன் கார்டை பெறுவதற்கு கடினமாக இருந்த நிலையில், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர்கள் விவரம் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உணவு வழங்கல் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த  மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். மே மாதத்தில் 1,26,414 பேர், ஜூன் மாதத்தில் 1,57,497 பேர், ஜூலை மாதத்தில் 2,61,529 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தென் சென்னையில் 49920 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 15687 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2041 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது. 

வட சென்னையில் 41431 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 16608 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 5312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில், 15054 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 1554 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் 43,647 பேர் விண்ணப்பித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 38,295 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 15687 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2041 பேருக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் ரேஷன் கார்டு: 2 மாதத்தில் 7 லட்சத்தை கடந்த விண்ணப்பங்கள்!

முன்னதாக, கடந்த மாதம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இணையவழியில் புகார் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் அவற்றில் உள்ள சிரமங்களை இணையவழியில் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நியாய விலைக்கடைகளில் புகார் பதிவேடு முறை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணைய வழி புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புகார் பதிவேட்டு முறையை உடனடியாக அமல்படுத்த நுகர்பொருள் வழங்கல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget