மேலும் அறிய

Rain Alert: தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ள 4,970 நிவாரண முகாம்கள் - வருவாய் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்

Rain Alert: தமிழ்நாட்டில் 4,970 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக, வருவாய் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, வருவாய் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடரும் கனமழை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த, பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழ தொடரும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு:

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர், கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 4, 970 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரையோர மாவட்டங்களில்  121 இடங்களில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,  400 மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. எந்த சூழல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு உரிய தகவல் கொடுத்த பிறகே  நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 22 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், உயிர்சேதம் இல்லாத நிலை உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவிகிதமும், புழல் ஏரியில் 82 சதவிகிதமும் நீர் இருப்பு உள்ளது” என அமைச்சர்  கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

27 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை:

முன்னதாக, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசின் தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ”பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகங்களைத் தயார்படுத்த வேண்டும், எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikasi Visagam: இன்று வைகாசி விசாகம்.. விரதம் இருக்கும் பக்தர்கள் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
இன்று வைகாசி விசாகம்.. விரதம் இருக்கும் பக்தர்கள் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
Olympics: ஒலிம்பிக் போட்டிகள் : இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்ற கதை
Olympics: ஒலிம்பிக் போட்டிகள் : இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்ற கதை
7 AM Headlines: இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. நடுவானில் குலுங்கிய விமானம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. நடுவானில் குலுங்கிய விமானம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
”வெளிநாட்டில் வேலை” மோசடி கும்பல் ஜாக்கிரதை.. மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
”வெளிநாட்டில் வேலை” மோசடி கும்பல் ஜாக்கிரதை.. மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikasi Visagam: இன்று வைகாசி விசாகம்.. விரதம் இருக்கும் பக்தர்கள் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
இன்று வைகாசி விசாகம்.. விரதம் இருக்கும் பக்தர்கள் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
Olympics: ஒலிம்பிக் போட்டிகள் : இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்ற கதை
Olympics: ஒலிம்பிக் போட்டிகள் : இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்ற கதை
7 AM Headlines: இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. நடுவானில் குலுங்கிய விமானம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. நடுவானில் குலுங்கிய விமானம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
”வெளிநாட்டில் வேலை” மோசடி கும்பல் ஜாக்கிரதை.. மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
”வெளிநாட்டில் வேலை” மோசடி கும்பல் ஜாக்கிரதை.. மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
Job Alert:மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலிப் பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலிப் பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!
Rasipalan : மகரத்துக்கு தடைகள் விலகும், தனுசுக்கு லாபம்: இன்றைய ராசி பலன் இதோ!
Rasipalan : மகரத்துக்கு தடைகள் விலகும், தனுசுக்கு லாபம்: இன்றைய ராசி பலன் இதோ!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Embed widget