May 1: மே 1ம் தேதி! ஒரே நாளில் 3 முக்கிய கொண்டாட்டங்கள் - என்னென்ன?
மே 1ம் தேதியான நாளை உழைப்பாளர் தினம், அஜித் பிறந்த நாள் மற்றும் குரு பெயர்ச்சி என மூன்று முக்கிய நிகழ்வுகள் கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு மாத தொடக்கமும் நமக்கு புது உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தரும். அந்த வகையில் மே மாதம் 1ம் தேதி மிகவும் தனித்துவமானது ஆகும். நடப்பாண்டிற்கான மே 1ம் தேதியில் மூன்று முக்கிய நிகழ்வுகள் வருகிறது. அது என்னென்ன என்பதை கீழே காணலாம்
உழைப்பாளர் தினம்:
இந்த உலகம் இன்று இந்தளவு தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருப்பதற்கு மூலக்காரணமாக திகழ்பவர்கள் உழைப்பாளர்கள். பல நூற்றாண்டுகள் பல நாடுகளில் கொத்தடிமைகளாக மிக மிக கடுமையாக உழைத்த உழைப்பாளிகளை வரலாறுகள் கூறுகின்றன. 19ம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்ல உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் வெறும் 8 மணி நேரம் மட்டுமே ஒரு நாளில் உழைக்க வேண்டும் என்று போராடி உரிமையை பெற்றதையே உழைப்பாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தியாவில் 1923ம் ஆண்டு முதல் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அஜித் பிறந்த நாள்:
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் அஜித்குமாருக்கு 53வது பிறந்த நாள் ஆகும். நடிகர், மெக்கானிக், ட்ரோன் உருவாக்குபவர், பைக் ரேஸர், கார் பந்தய ரேஸர் என பன்முகத்தன்மை கொண்ட அஜித்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
குரு பெயர்ச்சி:
ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் தருவதாக ஜோதிடத்தில் கருதப்படுவது குரு பெயர்ச்சி ஆகும். நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி மே 1ம் தேதி அரங்கேறுகிறது. மே 1ம் தேதியில் (சித்திரை 20) மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷபத்திற்கு செல்கிறார். மாலை 5.30 மணியளவில் இந்த குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஒவ்வொரு ராசியினருக்கும் பல மாற்றங்களும், ஏற்றங்களும் அரங்கேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்பாளர் தினம், அஜித் பிறந்த நாள் மற்றும் குரு பெயர்ச்சி மூன்று விதமான கொண்டாட்டங்கள் இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: காதலிக்காக கண்ணாடி மாளிகையை கட்டிய 18-ம் நூற்றாண்டு ராஜா; தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா?
மேலும் படிக்க: Nirmala Devi Case: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு; நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை