தவறி விழுந்த கொத்தனார் தோளில் பாய்ந்த கம்பிகள்: போராடி மீட்ட டாக்டர்கள்!
சென்னையில் கட்டடப்பணியின்போது தவறி விழுந்த கொத்தனாரின் தோள் பட்டையில் குத்திய 2 அடி நீள கம்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னையில் கட்டடப்பணியின்போது தவறி விழுந்த கொத்தனாரின் தோள் பட்டையில் குத்திய 2 அடி நீள கம்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(19). கொத்தனர் பணி செய்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தில் கட்டட வேலை எடுத்து பார்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளார் கண்ணன். மாலை நேரத்தில், செண்ட்ரிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் கண்ணன். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அங்கு செண்ட்ரிங் அடிப்பதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த கம்பிகள் மீது விழுந்தார். இதில் சுமார் 2 அடி நீளம் உள்ள 2 கம்பிகள் கண்ணனின் தோள்பட்டை பகுதியில் குத்தி மறுபக்கமாக வெளியே வந்தது.
ரத்த வெள்ளத்தில் வலியால் அலறித் துடித்த கண்ணனை அங்கிருந்தவர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு 12.30 மணியளவில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவமனை டீன் தேரணிராஜன் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்து ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு தோள்பட்டையில் குத்தியிருந்த 2 அடி நீள 2 கம்பிகளை அகற்றினர். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொத்தனாரின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை டீன் தேரணிராஜன் வெகுவாகப் பாராட்டினார்.
அரக்கோணம் அருகே 18வயதுஇளைஞர் தவறி விழுந்ததில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.நேற்றிரவு 12.15க்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின் காப்பாற்றப்பட்டார், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் pic.twitter.com/OazKtxLWfj
— Subramanian.Ma (@Subramanian_ma) December 5, 2021
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்