மேலும் அறிய

புதுக்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை மற்றும் கழுவேற்றக்கல் கண்டுபிடிப்பு

’’சமண சிற்பமும் அதனருகே கழுமரமும், சிதைந்த சைவ கோவிலும் அருகருகே  அமைந்துள்ளதால் சமணர்களை கழுவேற்றிய இடமாக இறையூர் இருந்ததா என ஆய்வு’’

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் இறையூர் கிராம பகுதியில் இருந்து முத்துக்காடு செல்லும் சாலையின் வடபுறமாக மகாவீரர் சமண சிற்பத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள் ச.மாரியம்மாள், சா.ரெங்கராஜ், இரா.பிரியங்கா, ச.லோகேஸ்வரன் ஆகியோர் கண்டுபிடித்தனர். மேலும்  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையில் உறுப்பினர்கள் பேராசிரியர் கருப்பையா, கவிஞர் மூட்டாம்பட்டி  ராஜூ, ராஜாங்கம் , இளங்கோ   ஆகியோர் தொடராய்வு மேற்கொண்ட போது கழுமரம், சதுர ஆவுடையுடன் கூடிய லிங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது,  பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம்,  சமண மதத்தின்  24 ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமானர் எனும் மகாவீரர் திருமேனி என்பதை உறுதி செய்யப்பட்டது. இச்சிற்பம் 89 சென்டிமீட்டர் உயரமும், 54 சென்டிமீட்டர் அகலத்துடனும் காணப்படுகிறது.

புதுக்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை மற்றும்  கழுவேற்றக்கல் கண்டுபிடிப்பு

மேலும் இச்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு  100 மீட்டர்  தொலைவில் நாட்டார் வழிபாட்டு காமாட்சி அம்மன்  ஆலயம் உள்ளது.  அதன் எதிர்புறத்தில் சுமார்  150 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாலான 170 சென்டி மீட்டர் உயரமுடைய  கழுமரம் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. இவ்விடத்திற்கு அருகில் பாண்டியர் கலைப்பாணியிலான சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், நாயுடன் கூடிய பைரவர் சிற்பத்தின் உடைந்த சிற்பம், முழுதும் சிதைந்த  நந்தி, பதிமூன்றாம் நூற்றாண்டைச்  சேர்ந்த விநாயகர், வீரபத்திரர் சிற்பம் உள்ளிட்டவையோடு கூடிய ஏழுகன்னியர் சிற்பத்தொகுதி , கற்கோவிலின் சிதலமடைந்த அடிமானம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன்,  சிதைந்த சுருள் முடி தலையுடனும், மூடிய கண்கள், தெளிவற்ற மூக்கு, நீண்ட துளையுடைய காதுகள், விரிந்த மார்புடன்  அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் எனும்    முக்குடையும், பின்புலத்தில்  முக்குடைக்கு மேலாக குங்கிலிய மரமும் அதில் தொங்கும் குஞ்சமும் காட்டப்பட்டுள்ளன. முதுகின் பின்புறம் சாய்மானத்திற்கான திண்டு அமைக்கப்பட்டு உள்ளது. சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் உடலில் ஆபரணங்களுடனும் தலையில் கிரீடத்துடனும், ஒரு கையில்  சாமரத்தை தோளில் சாய்த்தவாறும் , மற்றொரு கையை இடுப்பில் வைத்த நிலையிலும்   வடிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை மற்றும்  கழுவேற்றக்கல் கண்டுபிடிப்பு
 
மேலும் இறையூரில் வழிபாட்டிலுள்ள கழுமரம் சமீப காலத்தையதாகும். மேலும் மரம் மற்றும் இரும்பாலான கழுமரம் அழிந்த பிறகு அதே போன்று கல்லில் செய்து வழிபடுவதாக புரிந்துகொள்ள முடிகிறது.  காத்தவராயன் அருளாடுபவர் இக்கழு மரத்தில் ஏறி நின்று அருள்வாக்கு கூறுவதாக மக்கள் கூறுகின்றனர். இந்த பண்பாட்டு வழக்கம் தென் மாவட்டங்களில் இன்றளவும் நடைமுறையிலுள்ளது. திருட்டு உள்ளிட்ட  சமூக குற்றங்களை செய்வோரையும், எதிர் நாட்டவரையும் கழுவேற்றி தண்டனை வழங்கப்பட்டது குறித்து, செவி வழி செய்திகளும் சில நாட்டார் பாடல்களின் மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது. சமணர் கழுவேற்றப்பட்டது குறித்து பல்வேறு இலக்கியங்கள் சான்று பகிர்கிறது. மேலும் சமண சிற்பமும் அதனருகே கழுமரமும், சிதைந்த சைவ கோவிலும் அருகருகே  அமைந்துள்ளதால் சமணர்களை கழுவேற்றிய இடமாக இறையூர் இருந்ததா என்பது குறித்து தொடர் ஆய்வுகளுக்கு இந்த புதிய சான்றுகள் வழிவகை செய்கிறது என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget