Police Transfer: நெருங்கும் மக்களவை தேர்தல்.. சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்!
சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த மாதம் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் 16 ஐபிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஐஜி ஆர்.தமிழ் சந்திரனுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.
வி.ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக வி.ஜெயஸ்ரீ நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லஷ்மி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.