மேட்டூர் அணையில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கிய நீர்வரத்து...
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 95 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று ஆயிரத்து 621 கன அடியாக குறைந்து; இன்று காலை 3 ஆயிரத்து 46 கன அடியாக மீண்டும் நீர் வரத்து உயர்ந்துள்ளது

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் குறுவை சாகுபடிக்காக 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் தொர்ந்து சரிந்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.99 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 95 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று ஆயிரத்து 621 கன அடியாக குறைந்து. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரத்து 46 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நீர் இருப்பு 37.14 டி.எம்.சி ஆக உள்ளது.

கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நீர்வரத்து குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கே ஆர் எஸ், கபினி அணையிலிருந்து 10,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று 114.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 882 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,260 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரியில் உபரி நீர் வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் கடந்த 24 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ண சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ண சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 621 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 3 ஆயிரத்து 046 கன அடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.07 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 38.15 டி.எம்.சி ஆக குறைந்துள்ளது. அணையின் நீர்வரத்து ஆயிரத்து 621 கன அடியிலிருந்து 3 ஆயிரத்து 046 கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்து குறைந்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















