மேலும் அறிய

எடப்பாடியில் திமுக, அதிமுக நிர்வாகிகள் ஒரே நாளில் கட்சி மாறிய பரபரப்பு!

எடப்பாடி தொகுதியில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஒரே நாளில் மாற்றுக்கட்சிகளில் இணைந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே நாளில் மாற்றுக்கட்சிகளில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவிலும், கொங்கணாபுரம் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் முன்னிலையிலும் அதிமுகவிலும் என திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பொறுப்பாளர்கள் மாறி, மாறி இணைத்துக்கொண்ட இச்சம்பவம் இரு கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த பிரபாகரன், பாமகவை சேர்ந்த சக்தி, தாவெகாவை சேர்ந்த சங்கர், பாஜகவை சேர்ந்த ஹரி ஆகியோர் தலைமையிலான மாற்று கட்சியினர் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த அனைவருக்கும் திமுக பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்ற சேலம் எம்பி டி.எம். செல்வகணபதி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் டாட்டா, கொங்கணாபுரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிர்லா உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

 இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் திமுக ஒருங்கிணைந்த ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி  சங்ககிரியை அடுத்த தேவூர் பகுதியிலுள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றிய திமுக ஒருங்கிணைந்த ஒன்றிய துணைச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் முன்னிலையில் இணைத்துக் கொண்டவர்களை பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.

 இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இணைந்த அண்ணாதுரை கூறியபோது திமுகவில் கொங்கணாபுரம் ஒன்றிய துணைச்செயலாளராக தொடர்ந்து ர6 வருடங்கள் பணியாற்றி வந்ததாகவும் திமுகவில் உள்ள மேல்பட்ட பொறுப்பாளர்கள் திமுக தொண்டர்களுக்கு மதிப்பளிப்பது இல்லை எனவும் திமுகவில் ஒன்றிய, நகர பொறுப்பு வழங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு பதவி கொடுப்பதாகவும் திமுக கட்சிக்காக ஒன்றிய துணைச் செயலாளராக 36 வருடங்களுக்கு மேலாக உழைத்தும் திமுகவில் எந்த மதிப்பளிக்காமல் 

தொண்டர்களை துச்சமாக நினைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் அலட்சியப்படுத்துவதாகவும் திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை பணம் கொடுப்பவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகவும் வருங்காலத்தில் தொண்டர்களுக்கு மதிப்பளிப்பது அதிமுக தான் என்றும் தெரிவித்தார்.

அப்போது சேலம் புறநகர் மாவட்ட ஒருங்கிணைந்த எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம் ஜி ஆர் (எ) தங்கவேல், கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், கோரணம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

 எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் திமுக, அதிமுக என இரு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாறி, மாறி இரு கட்சிகளில் இணைந்த இச்சம்பவம் இரு கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget