மேலும் அறிய
Advertisement
தமிழகம் வரும் காவிரி நீரின் அளவு 23,000 கன அடியிலிருந்து 28,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
’’கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு’’
தமிழக, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, கிருஷ்ணராஜ சாகர் அணை 124 அடியும், கபினி அணை 84 அடி என இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,100 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 23,000 கன அடியாக உயர்ந்து வந்தது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயின் அருவி, ஐந்தருவி, சினியருவி உள்ளிட்ட பகுதிகளில் பார்ப்பதற்கு ரம்மியமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வருவாய்த் துறை, காவல் துறையினர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,740 கன அடியிலிருந்து 29,380 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 114 அடியாக இருந்து நீர்மட்டம் இன்று 116 அடியாக உயர்ந்துள்ளது. உள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு, டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், நேற்று ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்திருப்பதால், ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் தேங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion