மேலும் அறிய
தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 22,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது
’’மழை குறைந்து வருவதால் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்’’

தமிழகம் நோக்கி வரும் காவிரி நீர்
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் இரண்டு அணைகளிலும் சேர்த்து குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் வட கிழக்கு பருவமழையால் தமிழ்நாடு கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி வரை உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை, சற்போது குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரங்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக இருந்தது. ஆனால் இன்று காலை நீர்வரத்து மீண்டும் குறைந்து வினாடிக்கு 17,000 கன அடியாக இருந்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து சரிந்தாலும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் மழை குறைந்து வருவதால் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
பாப்பாரப்பட்டி அருகே பிக்கப் வாகனத்தை திருடியதாக 2 பேர் கைது
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாமரத்துபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் டாட்டா ஏசி பிக்கப் வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு தனது வீட்டின் முன்பு வழக்கம் போல் வாகனத்தை நிறுத்திவிட்டு இருந்துள்ளார். தொடர்ந்து தூங்கி எழுந்து மறுநாள் காலையில் பார்க்கும் போது, வீட்டு முன்னாடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக்கப் வாகனம் காணவில்லை. இந்த வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பச்சையப்பன் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் வாகன பதிவு எண் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பச்சைப்பன் வீட்டு முன்பு இருந்த வாகனத்தை திருடிச் சென்றது, எட்டிக்குட்டை பகுதியைச் சார்ந்த பெருமாள், அருள் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், திருடிச் சென்று வாகனத்தை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கார்பேட்டை அருகே பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பெருமாள், அருள் இருவரையும் பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்து, திருடிச் சென்ற பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பாப்பாரப்பட்டி பகுதியில் வீட்டருகே நிறுத்தி வைத்த இருந்த பிக் அப் வாகனம் இரவு நேரத்தில் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
அரசியல்





















