மேலும் அறிய

தருமபுரி: தினசரி சேமிப்பு திட்டத்தில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் மனு!

பொம்மிடியில் தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி பல கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில், பணத்தை இழந்தவர்கள் எம்எல்ஏ-உடன் வந்து மனு அளிததனர்.

பொம்மிடியில் தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி பல கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில், பணத்தை இழந்தவர்கள் எம்எல்ஏ-உடன் வந்து மனு.
 
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் எனும் பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வந்தது. இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக இணைந்து தினமும் பணம் செலுத்து வந்துள்ளனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில் தினசரி சேமிப்பு திட்டம், வாராந்திர சேமிப்பு திட்டம், மாதாந்திர சேமிப்பு திட்டம், நிரந்தர இட்டு வைப்பு திட்டம் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 90 நாட்களுக்கு பணம் கட்டிய பிறகு கடன் வழங்கப்பட்டது. இதனை நம்பி நாள்தோறும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டி வந்துள்ளனர். தொடர்ந்து 360 நாட்கள் கட்டிய பிறகு தொகைக்கேற்ப 10% முதல் 20% வரை கூடுதல் தொகை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.  

தருமபுரி: தினசரி சேமிப்பு திட்டத்தில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் மனு!
 
பொம்மிடியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாளருக்கு பணம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை நம்பி பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், வேப்பிலைப்பட்டி, பையர்நத்தம் உள்ளிட்ட, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வணிகர்கள் தினந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பொம்மிடியில் கடந்த பத்து நாட்களாக தனியார் கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள், பணம் வசூல் செய்த ஊழியர்களை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போன் எடுக்கவில்லை. இதனால அச்சமடைந்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால், இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் புகார் மனு கொடுத்தனர்.
 
தருமபுரி: தினசரி சேமிப்பு திட்டத்தில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் மனு!
 
 இதன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, பொம்மிடியில் தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி தனியார் வங்கியில், தினசரி கூலி தொழில் செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள் என 600 பேர் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனம் மக்களுக்கு பணம் திருப்பி தராமல் வங்கி கிளையை மூடிவிட்டு சென்றுள்ளனர். இதனால் ரூ.5.40 கோடி ரூபாய் பணத்தை மக்கள் ஏமார்ந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை உடனடியாக மீட்டு தரவேண்டும். தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். மேலும் இதுப்போன்ற உரிய அனுமதியில்லாமல் நடைபெறும் நிறுவனங்களை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவிந்தசாமி தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget