மேலும் அறிய

54 வயதுடைய காதலரை கரம் பிடித்த 24 வயது இளம் பெண் - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்

இருவரும் மேஜர் என்பதாலும், காதல் கணவருடன் செல்வதாக கூறியதாலும், பெண்ணின் விருப்பபடி 54 வயதுடைய காதல் கணவர் கிருஷ்ணனுடன், 24 வயது காதல் மனைவி விமலாவை தாரமங்கலம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). விசைத்தறி தொழில் செய்து வரும் இவர் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மனைவியை பிரித்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதை பகுதியை சேர்ந்த 24 வயது விமலா என்ற பெண் கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில், இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இதைத்தொடர்ந்து தனது 54 வயதுடைய காதலர் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்த விமலா, அவரை திருமணம் செய்து வாழ முடிவு செய்தார். 

54 வயதுடைய காதலரை கரம் பிடித்த 24 வயது இளம் பெண் - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்

இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தாலி கட்டி திருமணம் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள் தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்றதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இருவரையும் தாரமங்கலம் காவல் துறை தேடிவந்தனர். இதைறிந்த காதலர்கள் இருவரும் திருமணம் ஆன நிலையில் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாரமங்கலம் காவல் நிலையம் வந்த பெண்ணின் உறவினர்கள் பட்டம் படித்த பெண், இப்படி அறிவிழந்து பாதை மாறி, தந்தை வயதுள்ளவரை திருமணம் செய்யலாமா என்று பல அறிவுரைகளை கூறி கதறி அழுதனர். மேலும், படித்த வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பெண்ணின் காலில் விழுந்து கதறினர். 

54 வயதுடைய காதலரை கரம் பிடித்த 24 வயது இளம் பெண் - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்

ஆனால், விமலா தான் விரும்பி காதலித்த தனது காதல் கணவர் கிருஷ்ணன் உடன் தான் சென்று வாழ்வேன் என கூறினார். இருவரும் மேஜர் என்பதாலும், காதல் கணவருடன் செல்வதாக கூறியதாலும், பெண்ணின் விருப்பபடி 54 வயதுடைய காதல் கணவர் கிருஷ்ணனுடன், 24 வயது காதல் மனைவி விமலாவை தாரமங்கலம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருவரும் காவல் நிலையத்தில் இருந்து கைகோர்த்துக்கொண்டு சந்தோசமாக சென்றனர். இதனிடையே 54 வயதானவரை 24 வயது பெண் காதல் திருமணம் செய்த தகவல் தாரமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?

Breaking News LIVE: போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம் இது - கமல்ஹாசன்

Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?

MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்

metaverse

வீடியோ

Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!kallakurichi Kalla Sarayam | சட்டமன்றம் கிடக்கட்டும்.. கள்ளக்குறிச்சிக்கு வண்டிய விடு! விரையும் EPS!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
Breaking News LIVE: போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம் இது - கமல்ஹாசன்
Breaking News LIVE: போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம் இது - கமல்ஹாசன்
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
Kallakurichi Illicit Liquor: விஷ சாராயம் குடித்தால் காப்பாற்ற இவ்வளவு நேரம்தான் டைம்: மருத்துவர்கள் சொல்வது என்ன?

kilambakkam to Tiruvallur : கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.. பஸ் டைமிங் தெரிந்துகொள்ளுங்கள் ..!
கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.. பஸ் டைமிங் தெரிந்துகொள்ளுங்கள் ..!
Astrology: கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா?” வெளியான பரபரப்பு அறிக்கை..!

Embed widget