மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 12,713 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 15,710 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 11,208 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 92.23 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana, J&K Election Result LIVE: பட்காம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை
Haryana, J&K Election Result LIVE: பட்காம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை
TN Cabinet Meeting: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் - உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்? முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்
TN Cabinet Meeting: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் - உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்? முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்
Haryana J&K Election: ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி? ஜம்மு&காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி? - இன்று வாக்கு எண்ணிக்கை
Haryana J&K Election: ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி? ஜம்மு&காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி? - இன்று வாக்கு எண்ணிக்கை
Jammu Kashmir election: ஜம்மு&காஷ்மீர் தேர்தல் - ஆளுநர் அதிகாரத்தால் ஆட்சியை கைப்பற்றும் பாஜக? வெடித்த சர்ச்சை
Jammu Kashmir election: ஜம்மு&காஷ்மீர் தேர்தல் - ஆளுநர் அதிகாரத்தால் ஆட்சியை கைப்பற்றும் பாஜக? வெடித்த சர்ச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on Marina Airshow : ’’இவ்ளோ மக்கள் வருவாங்கனு எதிர்பார்க்கல’’முதல்வர் பரபரKanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?Rahul Gandhi : தலித் வீட்டில் சமையல்!Cooking-ல் அசத்திய ராகுல்!நெகிழ வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana, J&K Election Result LIVE: பட்காம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை
Haryana, J&K Election Result LIVE: பட்காம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை
TN Cabinet Meeting: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் - உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்? முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்
TN Cabinet Meeting: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் - உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்? முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்
Haryana J&K Election: ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி? ஜம்மு&காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி? - இன்று வாக்கு எண்ணிக்கை
Haryana J&K Election: ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி? ஜம்மு&காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி? - இன்று வாக்கு எண்ணிக்கை
Jammu Kashmir election: ஜம்மு&காஷ்மீர் தேர்தல் - ஆளுநர் அதிகாரத்தால் ஆட்சியை கைப்பற்றும் பாஜக? வெடித்த சர்ச்சை
Jammu Kashmir election: ஜம்மு&காஷ்மீர் தேர்தல் - ஆளுநர் அதிகாரத்தால் ஆட்சியை கைப்பற்றும் பாஜக? வெடித்த சர்ச்சை
Iranian General Esmail Qaani: இஸ்ரேல் அட்டாக், ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி மரணமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Iranian General Esmail Qaani: இஸ்ரேல் அட்டாக், ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி மரணமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TN Rain Updates: ஆரஞ்சு அலெர்ட் - 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: ஆரஞ்சு அலெர்ட் - 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சியில் பதற்றம்... துர்க்கை அம்மன் சிலை உடைப்பு.. போலீஸ் தீவிர விசாரணை
கள்ளக்குறிச்சியில் பதற்றம்... துர்க்கை அம்மன் சிலை உடைப்பு.. போலீஸ் தீவிர விசாரணை
உலக தரத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. கட்டண விவரத்தை தெரிஞ்சுட்டு போங்க!
உலக தரத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. கட்டண விவரத்தை தெரிஞ்சுட்டு போங்க!
Embed widget