மேலும் அறிய

Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை... எப்போது பிடிப்பார்கள்..? - புதிய அப்டேட் இதோ

நான்கு இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்ட, நான்கு ட்ரோன்கள் மூலமாக பல பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 3 மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு, கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினசரி காலை மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி பின்னர் மாலை வீட்டின் அருகில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி மாடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை மாதையன் எழுந்து பார்த்தபோது ஒரு மாடு காணாமல் போனதை கவனித்தார். உடனடியாக அருகில் தேடிய போது மாட்டை மர்ம விலங்கு வேட்டையாடியது தெரிய வந்தது. 

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர் மாதையன் வீட்டின் அருகில் கேமராவை பொருத்திச் சென்றனர். மேலும் அங்கு ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மறுநாள் காலை வனத்துறையினர் வைக்கப்பட்ட கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை அதே இடத்திற்கு மீண்டும் வந்தது தெரியவந்தது. இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் தென்படாததால், சிறுத்தை மாற்று பாதையில் சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை... எப்போது பிடிப்பார்கள்..? - புதிய அப்டேட் இதோ

இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துகுழி, ஒட்டங்காடு, குழிக்காடு, புதுவேலமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் சிறுத்தையை பார்த்ததாக கூறியுள்ளனர். இந்த பகுதியில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் வீட்டை விட்டு மாலை நேரங்களில் வெளியே வராமல் அச்சமடைந்தனர். சிறுத்தை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட வேண்டும் என மேட்டூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். 

மேட்டூர் அருகே உள்ள வெள்ள கரட்டூரில் விவசாயி சுரேஷ் நிலத்தில் கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது. அதேபோல், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் பட்டியில் இருந்த 5 செம்மறியாடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர் சிவானந்தம் தலைமையில் வனவர் ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகளை வைத்து, இரவு ரோந்து பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் சிறுத்தை வந்த நிலையில் பொதுமக்கள் டார்ச் அடித்ததால் வெளிச்சத்தை பார்த்து, கூண்டில் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியது. வெள்ள கரட்டூர் முதலியார் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது வீட்டின் அருகே இருந்த பட்டியில் இருந்த 3 கோழிகளை சிறுத்தை பிடித்து சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பு ஏற்படுவது. 

Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை... எப்போது பிடிப்பார்கள்..? - புதிய அப்டேட் இதோ

தொடர்ந்து, 5வது நாளாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள், வனத்துறை சிறுத்தையை விரைந்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். இரவு நேரங்களில் காட்டுப்பகுதி அருகாமையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாடி வருவதால் அங்கிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். குழந்தைகளை பெற்றோர்கள் இரவு நேரத்தில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

சிறுத்தையை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு வனத்துறை குழு இரவு பகல் என நாள் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்ட, நான்கு ட்ரோன்கள் மூலமாக பல பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் 3 மருத்துவ குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Tata Punch Facelift EMI: லோன்ல கார் வாங்குற ஐடியா இருக்கா.? வெறும் ரூ.7,672 EMI-ல டாடா பஞ்ச் Facelift வாங்கலாம்; முழு விவரம்
லோன்ல கார் வாங்குற ஐடியா இருக்கா.? வெறும் ரூ.7,672 EMI-ல டாடா பஞ்ச் Facelift வாங்கலாம்; முழு விவரம்
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Embed widget