மேலும் அறிய

Salem: சேலம் மாவட்டம் இன்று 157-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. இந்த சிறப்புகள் தெரியுமா மக்களே..

சைலம் என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்று பொருள். அதுவே நாள் போக்கில் சேலம் என்று மாறி உள்ளது.

சேலம் மாவட்டம் இன்று 156 ஆண்டுகள் கடந்து 157 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்திலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்து 5-வது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது. சேலம் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.

Salem: சேலம் மாவட்டம் இன்று 157-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. இந்த சிறப்புகள் தெரியுமா மக்களே..

சேலம் மாவட்டத்தின் சிறப்புகள்:

சேலம் மாவட்டம் முதலில் சைலம் என்று அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சைலம் என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்று பொருள். அதுவே நாள் போக்கில் சேலம் என்று மாறி உள்ளது. இதற்கான எந்தவித ஆதாரங்கள், கல்வெட்டுக்கள் இல்லை. சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது 'மாம்பழம்' எனவே இதற்கும் 'மாங்கனி நகரம்' என்ற பெயரும் உண்டு. தற்போது, சேலத்தில் இரும்பு உருக்கு ஆலை அமைந்துள்ளதால் இதற்கு 'ஸ்டீல் சிட்டி' என்றும் கூறுவர்.

Salem: சேலம் மாவட்டம் இன்று 157-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. இந்த சிறப்புகள் தெரியுமா மக்களே..

பெருமைகள்:

சேலம் மாவட்டத்தில் விளையும் 'மல்கோவா மாம்பழம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1937 இல் இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில்தான். சேலம் ரயில்வே ஜங்ஷன் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடையாகும். சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறி, ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளி கொலுசுகள் ஆகும். இதுமட்டுமின்றி, மரவள்ளிக்கிழங்கு, பூக்கள், பழங்கள் என பல விவசாய தொழில்களும் உண்டு. ஏற்றுமதியை பொறுத்தவரை ஜவ்வரிசி, பட்டு ஆடைகள், பூ வகைகள், வெள்ளி கொலுசுகள், தேங்காய் நார் கயிறுகள் என பலவகையான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. சேலம் மாவட்டம் 'லீ பஜார்' கடைத் தெருவானது மிகவும் சிறப்பு வாய்ந்தது வணிக சந்தையாகும். இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று சந்தை நடைபெறும், அதில் மளிகை பொருட்கள் மொத்தமாக ஏலத்தில் விடப்பட்டு சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பழமையான இடங்கள் உண்டு. குறிப்பாக, உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில், தாரமங்கலம் சிவன் கோவில், திப்பு சுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், குழந்தைகள் ஏசு பேராலயம், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், எருமாபாளையம் ராமானுஜர் மடம் சிறப்புவாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும். நீர்நிலைகள் என்று பார்த்தால் காவிரி ஆறு தனது மிக நீண்ட பயணத்தின் ஒரு பகுதி சேலம் மாவட்டத்தில் பாய்ந்து ஓடுகிறது. இது தவிர கஞ்ச மலையில் உருவாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டம் முழுவதும் பாய்ந்தோடும் ஆறாகும். 

Salem: சேலம் மாவட்டம் இன்று 157-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. இந்த சிறப்புகள் தெரியுமா மக்களே..

கஞ்சமலை, தீர்த்தலை ஆகிய மலையில் இரும்புத்தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில் வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது.

சுற்றுலா தலங்களை பொருத்தவரை சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, டெல்டா விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை மற்றும் பூங்கா, ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகும். எத்தனை பெருமைகளை தனக்குள் அடங்கி இருக்கும் சேலம் மாவட்டத்திற்கு இன்று 157-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு தரமற்ற உணவு! அமைச்சரின் திடீர் விசிட்.. மாட்டிக்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்
பயணிகளுக்கு தரமற்ற உணவு! அமைச்சரின் திடீர் விசிட்.. மாட்டிக்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்
சேலத்தின் புதிய போலீஸ் கமிஷனர் யார்? - சார்ஜ் எடுத்த முதல் நாளிலே கொடுத்த அதிரடி வார்னிங்!
சேலத்தின் புதிய போலீஸ் கமிஷனர் யார்? - சார்ஜ் எடுத்த முதல் நாளிலே கொடுத்த அதிரடி வார்னிங்!
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?
"இப்பவே முழிச்சுக்கலனா பேரழிவை சந்திக்க வேண்டி வரும்" - தமிழக அரசுக்கு வார்னிங்

வீடியோ

TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget