மேலும் அறிய

Salem SP WhatsApp Status Issue: சேலம் எஸ்பி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விவகாரம் - விளக்கம் கேட்டு டிஐஜி மெமோ

சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெறவேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார் என எஸ்பி பரபரப்பு ஸ்டேட்டஸ்.

சேலம் மாநகரகாவல் துணை ஆணையாளர் லாவண்யா குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் வாட்ஸ் அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (14/07/2023) மதியம் 2 மணி அளவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் அவரது தொலைபேசி எண்ணில் உள்ள வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் "பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை" என்ற தலைப்புடன் வாசகங்கள் இடம் பெற்றது. இதில் "சேலம் மாநகரத்தில் திருமதி லாவண்யா என்பவர் காவல் துணை ஆணையராக இருக்கிறார். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெறவேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வுபெற்ற டிஜிபி இடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியை பெற முயற்சி செய்தார்" என அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். ஸ்டேட்டஸ் வைக்கப்பட்ட மூன்று நிமிடங்களில் அந்த ஸ்டேட்டஸ் ஆனது அகற்றப்பட்டது. 

Salem SP WhatsApp Status Issue: சேலம் எஸ்பி  வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விவகாரம் - விளக்கம் கேட்டு டிஐஜி மெமோ

இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, “எனது வாட்ஸ் அப்பில் உள்ள பல குழுக்களில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா குறித்து செய்தி ஒன்று பரவி வந்தது. இதனை சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா இருவருக்கும் பகிர்ந்தேன். பின்னர் அடுத்த மூன்று நிமிடங்களில் எனது நண்பர் ஒருவர் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா குறித்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக தெரிவித்தார். உடனடியாக அதனை அகற்றிவிட்டேன். அது தவறுதலாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வந்துவிட்டது. இது என்னை அறியாமல் நடந்த தவறு. இதற்கு நான் மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பது மிகவும் தவறு. இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமார் மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யாவிற்கும் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்து வருத்தம் தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைத்த ஸ்டேட்டஸ் விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, கடந்த 14 ஆம் தேதி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கி உள்ளார். இதற்கு முறையான விளக்கம் அளிக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget