மேலும் அறிய

சேலம்: கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு 3ஆம் நாளாக செவிலியர்கள் போராட்டம்

செவிலியர்கள் போராட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அருகில் கண்களை கருப்பு துணியாய் கட்டிக்கொண்டு 3ம் நாள் போராட்டம்

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி பணி நீட்டிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அரசாணை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம்: கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு 3ஆம் நாளாக செவிலியர்கள் போராட்டம்

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 மேற்பட்ட செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொளுத்தும் வெயிலிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம்: கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு 3ஆம் நாளாக செவிலியர்கள் போராட்டம்

மூன்றாம் நாளாக செவிலியர்கள் போராட்டத்திற்கு பாமக, கம்யூனிஸ்ட், பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல கட்சியினர் மற்றும் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து செவிலியர்கள் கூறுகையில், "கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கான சேவையில் ஈடுபட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் நேரடியாக பணி வழங்கவில்லை. மருத்துவப் தேர்வாணையம் தேர்வு எழுதி 60% சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். ஆறு மாத காலம் பணிக்கு நியமிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டும். திடீரென கடந்த 31 ஆம் தேதி உங்களுக்கான தற்காலிக பணி நிறைவு பெற்றுவிட்டது நாளை முதல் நீங்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் என கூறினர். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும். அமைச்சர் பலமுறை உறுதியளித்து விட்டார் ஆனால் எங்களுக்கு முறையான அரசாணை வெளியிட்டு பணியானையும் வழங்கப்பட வேண்டும்" என்று கூறினர். 

இதற்கிடையே செவிலியர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் அனைவரையும் காவல்துறையினர் இரண்டாவது நாளாக நேற்றும் கைது செய்தனர். இன்று காலை செவிலியர்கள் போராட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அருகில் கண்களை கருப்பு துணியாய் கட்டிக்கொண்டு மூன்றாம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget