மேலும் அறிய

Salem Accident: சேலம் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சோகம் - விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் கைது

விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுக்கம்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ரமேஷ் என்பவரை வீராணம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளி மற்றும் அவர்களது மகள் மூவரும் இருசக்கர வாகனத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார். இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்துவந்த முருகன், அவரது மனைவி நந்தினி. இவர்களின் மூன்று வயது மகன் கவின், மூவரும் இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்

அப்போது, சேலம் சுக்கம்பட்டி அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் சென்ற லாரி வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர் லாரியின் வேகத்தை குறைத்த போது பின்னால் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் லாரியின் பின்னால் நின்றுள்ளனர். அப்போது ஆச்சா குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து இரண்டு இரு சக்கர வாகனத்திற்கும் பின்னால் மோதியது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கவின் என்ற மூன்று வயது சிறுவன் மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்தார். மற்றொரு சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் வேதவள்ளியின் கணவர் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Salem Accident: சேலம் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சோகம் - விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் கைது

மேலும் பேருந்தில் வந்த பத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் அரூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுக்கம்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ரமேஷ் என்பவரை வீராணம் காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்தை அதிவேகமாக இயக்கி வந்ததால் வேகத்தடையில் பேருந்தை நிறுத்த முடியாமல் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget