மேலும் அறிய

சேலத்தில் அதிகரிக்கும் கந்து வட்டி கொடுமை - ஒரே வாரத்தில் 2 குடும்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

கந்துவட்டி விவகாரத்தில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் அருகே கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

சேலம் மாவட்டம், தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் அவரது மனைவி திரிஷா மற்றும் மாமியார் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

சேலத்தில் அதிகரிக்கும் கந்து வட்டி கொடுமை - ஒரே வாரத்தில் 2 குடும்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், செந்தில் என்பவரிடம் கந்துவட்டிக்கு 20 ஆயிரம் கடன் பெற்ற நிலையில் அதற்கான தொகை 16 ஆயிரம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள பணத்திற்கு செலுத்துவதற்கு காலதாமதம் ஆனதால் செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகள் தகாத வார்த்தையில் பேசியும், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் எனது மனைவியை எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கந்துவட்டி நபர் செந்தில் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் அதிகரிக்கும் கந்து வட்டி கொடுமை - ஒரே வாரத்தில் 2 குடும்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

இதேபோன்று கடந்த மாதம் 29 ஆம் தேதி சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி சேர்ந்த இளங்கோவன் அவரது மனைவி ரமா பிரபா இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இளங்கோவன், ரமா பிரபா மற்றும் இரண்டு மகள்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து நான்கு பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி நீரை ஊற்றி அவர்கள் பிரச்சனை குறித்து கேட்டறிந்தனர். 

சேலத்தில் அதிகரிக்கும் கந்து வட்டி கொடுமை - ஒரே வாரத்தில் 2 குடும்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் இரண்டு சக்கர வாகனம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும் எனது மகளின் படிப்பிற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆறுமுகத்திடம் வட்டிக்கு பணம் வாங்கினோம். தொடர்ந்து வட்டியை கட்டி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் சரிவர வட்டியை கட்ட முடியவில்லை. அசல் தொகையை கட்டிய பிறகும் வட்டித் தொகை கட்டவில்லை என்று ஆறுமுகம் மற்றும் அவரது மகன் நடேசன் ஆகியோர் வீட்டிற்கு வந்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு வீட்டிற்கு வந்து தனது பெண்ணை தகாத வார்த்தையில் மிரட்டினர். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து எனது மகள் பிரியங்கா முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு இதுகுறித்து மனு அனுப்பினார். இதை அறிந்த அதிமுக பிரமுகர் ஆறுமுகம் மற்றும் அவரது மகன் நடேசன் ஆகியோர் வீட்டிற்கு வந்து முதலமைச்சரிடமே புகார் தெரிவிக்கிறாயா என கூறி மகளை அனுப்பிவை என்றும்தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மன வேதனை தாங்க முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் என நினைத்து இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தோம் என தெரிவித்தனர். இதனையடுத்து நகர காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் ஒரே வாரத்தில் இரண்டு குடும்பங்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
TN Rain: உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
Embed widget