மேலும் அறிய
Advertisement
ஒகேனேக்கல்லில் இடித்தாக்கியதில் மரத்தடியில் நின்ற பொரி வியாபாரி உயிரிழப்பு
திடிரென இடி மரத்தின் மீது இறங்கியதால், மரத்தடியில் இருந்த அர்த்தனாரி மீது இடி தாக்கியது. இந்த இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததிருந்தது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்து. இன்று ஒகேனக்கல் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த அர்த்தனாரி என்பவர், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தொங்கு பாலம் செல்லும் வழியில், மரத்தடியில் பொரி வியபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மழை பெய்ததால் பெரியை ப்ளாஸ்டிக் காகிதம் போட்டு மூடிவிட்டு மழைக்கு அங்கிருந்த மரத்தடியில் ஒதுங்கியுள்ளார். அப்போது திடிரென இடி மரத்தின் மீது இறங்கியதால், மரத்தடியில் இருந்த அர்த்தனாரி மீது இடி தாக்கியது. இந்த இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒகேனக்கல் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இடிதாக்கி பொரி வியாபரி இறந்த சம்பவம், சுற்றுலா பயணிகளிடை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion