மேலும் அறிய

தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்

காரிமங்கலம் அருகே ஏரிகளில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி, ஏரிகளை சுற்றிலும் 2,100 பலமரங்களை நட்டு வைத்து, மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் கிராம ஊராட்சியில் முக்குளம், சீகலஹள்ளி, மொரசப்பட்டி, மூக்கனூர், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த முக்குளம் ஊராட்சியில் மொரசப்பட்டி ஏரி, முக்குளம் ஏரி, சீகலஹள்ளி ஏரி, சோமலிங்க ஐயர் ஏரி உள்ளிட்ட 5 ஏரிகள் உள்ளன.  ஆனால் இந்த ஏரிகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்ததும், கரையோரங்களில் முட்புதர்களுமாக இருந்து வந்தது. இதனால் மழைக் காலங்களில் வரும் குறைந்த அளவு தண்ணீரும், தேக்கி வைக்க முடியாமல், உடனடியாக வற்றிப் போய்விடும். இதனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஊராட்சிக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காஞ்சனா கண்ணபெருமாள் ஊராட்சியில் உள்ள நீர்வளத்தை பெருக்க வேண்டும் என திட்டமிட்டார். இதனை அடுத்து பஞ்சாயத்துகளில் உள்ள ஐந்து ஏரிகளையும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் பணியாளர்களை வைத்து சீமை கருவேலம் மரங்களை முழுவதும் அகற்றி ஏறி கரையோரையில் இருந்த முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினார்.
 
தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்
 
மேலும் ஏரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக ஏரிக்கரை முழுவதுமாக பலன் தரும் மரம் மற்றும் நிழல் தரும் மரங்களை, ஆந்திர மாநிலத்திற்கு சென்று 2100 மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டு பராமரித்து வருகிறார். இந்த மரக்கன்றுகள் ஒன்றின் விலை 600 ரூபாய். இதில் மா, பலா, வாழை, நாவல், மூங்கில், காட்டு நெல்லி உள்ளிட்ட பலன் தரும் மரங்களை நட்டு வைத்துள்ளனர். இந்த மரங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் பராமரிப்பு பணிகளை ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் உள்ள பெண்கள் தினமும் ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றுவதும், மருந்து தெளிப்பதுமாக தற்பொழுது பராமரித்து வருகின்றனர்.
 
இந்த மரங்கள் முழுவதும் ஓரிரு ஆண்டுகளில் பலன் தருகின்ற பொழுது இதில் கிடைக்கும் வருமானங்களை வைத்து கிராம ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தற்பொழுது பெய்த தொடர் மழையால் இந்த ஏரிகள் முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் ஏரியில் முழுவதும் சிறு சிறு செடி கொடிகள் கூட இல்லாமல் ஏரியைச் சுற்றிலும் பல்வேறு மரக்கன்றுகள் இருப்பதால் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது. இதனால் இந்த பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஊராட்சி மன்ற தலைவரின் பணியையும் பாராட்டியுள்ளார்.

தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்
 
மேலும் பஞ்சாயத்தில் மின் கட்டணத்தை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் 450-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் இருந்த அனைத்து மின்விளக்குகளையும் எல்இடி விளக்குகளாக மாற்றியுள்ளார். இதனால் எல்இடி  மின்விளக்குகளின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் மின்சாரமும் சிக்கனமாக பயன்படுத்தப்படும்.  மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு மின்மோட்டர் மூலம் தண்ணீர் நிரப்புவதில், போதிய அளவு மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டால் முறையாக தண்ணீர் வழங்க முடிவதில்லை. இதனால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொபைல் செயலி மூலமாக, கிணற்றிலிருந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இந்த செயலி மூலம் தண்ணீரை நிரப்புவதும், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் நிரம்பியதும், அதனை நிறுத்துவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் போதிய அளவு மின்சாரம் இருக்கிறதா? மகன்மோட்டரில் ஏதேனும் பழுது ஏற்படுகிறதா? என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இதனால் டேங்க் ஆபரேட்டர்கள் எங்கிருந்தாலும், இதனை இயக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறு மணி நேரம் ஓடுகின்ற மின்மோட்டர்கள் மூன்று மணி நேரத்தில், 8 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புகிறது. இதனால் கிராமத்தில் உள்ள மக்களுக்கு போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரமும் சிக்கனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளிலும் இந்த மொபைல் செயலியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்
 
மேலும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஜனசக்தி மிஷின் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, நாள் முழுவதும் பொது மக்களுக்கு கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்த அறை திறந்தே இருப்பதால், குடிநீர் தேவை உள்ள பெண்கள் குடங்களை எடுத்துச் சென்று எந்த நேரத்திலும் தேவையான அளவு தண்ணீரை பிடித்துக் கொள்கின்றனர். இதனால் முக்குளம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துள்ள இந்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாடுகள் கிராம மக்களை ஈர்த்துள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவரை போலவே மற்ற ஊராட்சிகளுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என கிராம மக்களே விரும்புகின்றனர். இவரைப் போன்ற ஊராட்சி மன்ற தலைவர் மற்ற ஊராட்சி மன்ற தலைவர்களின் செயல்பாடுகள் இருந்தால் அனைத்து கிராமங்களும் வளர்ச்சி பெறும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
Embed widget