மேலும் அறிய
Advertisement
எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்
பாலக்கோடு சட்டமன்ற அலுவலகத்திற்கு பாலக்கோடு அதிமுக எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன் ஆயுத பூஜை கொண்டாடினார்
பாலக்கோடு சட்டமன்ற அலுவலகத்திற்கு பாலக்கோடு அதிமுக எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன் ஆயுத பூஜை செய்து இனிப்புகள் வழங்கினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு சட்டமன்ற அலுவலகத்திற்கு பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் ஆயுத பூஜை செய்து அணைவருக்கும் பொறி மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. வி.ரங்கநாதன் ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர்செந்தில், முன்னாள் நகர செயலாளர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதூர் சுப்ரம்ணி, வீரமணி நகர இணை செயலாளர் இலட்சுமி குழந்தை, முன்னாள் தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், ஐடி விங்க் ராஜா, அசோக், அருள், முரளி உள்ளிட் ஏராளமான நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கர்நாடக வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று பேரை கர்நாடக வனத் துறையினர் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் அடுத்த ஏரிக்காடு பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து (27)என்பவர் நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன்களை வைத்து தமிழ்நாடு கர்நாடகா எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும் ஆலம்பாடி துறை, செங்கப்பாடி பகுதிகளில் தனது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த கவின்குமார் (27) (மருத்துவ படிப்பு முடித்துள்ளார்(MBBS) ) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோருடன் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக பகுதிகளுக்குள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கி மற்றும் காற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி (Airgun) ஆகிய இருவித துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு கடந்த மூன்றாம் தேதி 12 மணி அளவில் ஆலாம்பாடி துறை வனப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அப்பொழுது விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமராவில் இவர்கள் சுற்றித்திரிவதை புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக அலுவலர்கள், ஒகேனக்கல் வனத்துறையினர் உதவியுடன், ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த பச்சையண்ணன் மகன் மாரிமுத்துவை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது, அவர் மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு ஏர்கன் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருடன் வேட்டையாட வந்த, நல்லாம்பட்டியைச் சேர்ந்த கவின்குமார் மருத்துவ படிப்பு முடித்தவர்(MBBS) மற்றும் விக்னேஷ் ஆகியோரை இன்று கர்நாடக மாநில வனத் துறையினர் கைது செய்து, காவிரி ஆற்றை பரிசலில் கடந்து கொள்ளேகால் வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரியில் கேரளா சமாஜம் சார்பில் பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி கேரள சமாஜத்தின் 21 வது ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா விஜயதசமி தினமான இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரளா மாநிலம் கண்ணூர் விஷ்ணு நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion