மேலும் அறிய

ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலி: ஆம்னி பேருந்து ஓட்டுநர் முத்துசாமி பெங்களூரில் கைது!

ஆம்னி பேருந்து இயக்கி வந்த ஓட்டுநர் முத்துசாமி பெங்களூரில் கைது செய்யப்பட்டு சேலம் அழைத்து வந்துள்ளனர். அவரிடம் ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் உயிரிழந்த உறவினரின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து நேற்று நள்ளிரவில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்து, காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 11 வயது சிறுமி தன்சிகா மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஐந்து பேருக்கும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலி: ஆம்னி பேருந்து ஓட்டுநர் முத்துசாமி பெங்களூரில் கைது!

உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்.

1. சரண்யா (வயது 23 )

கணவர் பெயர் சுதாகர். முல்லைவாடி ஆத்தூர் .

2. சுகன்யா (வயது 27)

கணவர் பெயர் சந்தோஷ் 

புதிய கல்லா நத்தம் ரோடு முல்லைவாடி ,ஆத்தூர்,

3. சந்தியா (வயது 23 ) 

தகப்பனார் பெயர் மயில் வாகனம்.

4. ரம்யா (வயது 25)

த.பெ .ஆனந்தன் ,

குமாரமங்கலம் போக்கம்பாளையம் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்.

5. ராஜேஷ் (வயது29)

தகப்பனார் பெயர் ஆனந்தன் குமாரபாளையம் போக்கம்பாளையம் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம் .

6. தன்ஷிகா (வயது 11)

தகப்பனார் பெயர் சந்தோஷ் முல்லைவாடி, ஆத்தூர்.

இவர்களைத் தவிர மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பெயர் விவரம்.

1. பெரியண்ணன் (வயது 38) தகப்பனார் பெயர் பெரியசாமி

2. புவனேஸ்வரி (வயது 17) தகப்பனார் பெயர் ஹரி மூர்த்தி

3. கிருஷ்ணவேணி (வயது 45) கணவர் பெயர் செல்வராஜ்

4. உதயகுமார் (வயது 17) தகப்பனார் பெயர் சிவக்குமார்

5. சுதா (வயது 35 ) கணவர் பெயர் மயில்சாமி

மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி தன்ஷிகா உடல் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலி: ஆம்னி பேருந்து ஓட்டுநர் முத்துசாமி பெங்களூரில் கைது!

விபத்து குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அதன்பின் அங்கிருந்து விபத்து நடந்த சேலம் சென்னை நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஆம்னி பேருந்து இயக்கி வந்த ஓட்டுநர் முத்துசாமி பெங்களூரில் கைது செய்யப்பட்டு சேலம் அழைத்து வந்துள்ளனர். அவரிடம் ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget