Mettur Dam: மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு: உபரி நீர் நிறுத்தம்! விவசயிகள் அதிர்ச்சி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகில் வெளியேற்றப்பட்ட, 8,500 கனஅடி உபரி நீர் நிறுத்தப்பட்டது.

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகில் வெளியேற்றப்பட்ட, 8,500 கனஅடி உபரி நீர் நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு நீர்வரத்து திடீர் சரிவால் நிறுத்தம்
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு வாரத்துக்கு பின்பு நேற்று முன்தினம் காலை, 8 மணி நிரம்பியது. அணையில் இருந்து இரண்டாவது முறையாக வினாடிக்கு, 8,500 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 31,500 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து கர்நாடகா அணைகளின் உபரி நீர் திறப்பு குறைந்ததால் நேற்று மதியம், 12 மணிக்கு வினாடிக்கு, 22,500 கனஅடியாகவும், மாலை, 6 மணிக்கு, 19,000 கனஅடியாகவும் சரிந்தது.
அதற்கேற்ப நேற்று மதியம், 12 மணிக்கு வினாடிக்கு, 22,500 கனஅடியாக இருந்த டெல்டா பாசன நீர் திறப்பு மாலை, 6 மணிக்கு, 18,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம் காலை, 16 கண் மதகில் வெளியேற்றப்பட்ட, 8,500 கனஅடி உபரி நீர் நிறுத்தப்பட்டது.
ஒகேனக்கல் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், குளிக்க தடை தொடர்கிறது!
ஒகேனக்கல், காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 20,000 கன அடியாக சரிந்ததால், பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், குளிக்க தடை தொடர்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியாற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5 மணிக்கு வினாடிக்கு, 43,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 24,000 கன அடியாக சரிந்தது. அது மாலை, 5:00 மணிக்கு, 20,000 கன அடியாக மேலும் குறைந்தது. நீர்வரத்து சரிவால் நேற்று காலை முதல், ஆற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, 2வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.




















