மேலும் அறிய

Mettur Dam: தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்வரத்து எத்தனை கனஅடி உயர்வு?

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 15,531 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16,196 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur Dam: தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்வரத்து எத்தனை கனஅடி உயர்வு?

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 92 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 54.96 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்வரத்து எத்தனை கனஅடி உயர்வு?

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
Rasi Palan Today Oct 17: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Breaking News LIVE 17th oct 2024: கே.கே.நகரில் நேபாள நாட்டு சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது
Breaking News LIVE 17th oct 2024: கே.கே.நகரில் நேபாள நாட்டு சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
Embed widget