மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,122 கன அடியில் இருந்து 1,560 கன அடியாக குறைவு..

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்காமல் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,446 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,122 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,560 கன அடியாக குறைந்துள்ளது. 

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,122 கன அடியில் இருந்து 1,560 கன அடியாக குறைவு..

அணையின் நீர் மட்டம் 35.38 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 9.83 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 6,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,122 கன அடியில் இருந்து 1,560 கன அடியாக குறைவு..

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.9 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,147 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6,034 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 56.01 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 14.28 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 2,796 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 4,890 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! பெங்கல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Jacob Bethall: ஆர்சிபி-யின் புது அஸ்திரம்; சிக்ஸர் மன்னன் ஜேக்கப் பெத்தேல் - யார் இந்த விடிவெள்ளி?
Jacob Bethall: ஆர்சிபி-யின் புது அஸ்திரம்; சிக்ஸர் மன்னன் ஜேக்கப் பெத்தேல் - யார் இந்த விடிவெள்ளி?
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget