மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,968 கன அடியில் இருந்து 2,899 கன அடியாக குறைவு..

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்காமல் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,794 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,968 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,899 கன அடியாக குறைந்துள்ளது. 

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,968 கன அடியில் இருந்து 2,899 கன அடியாக குறைவு..

அணையின் நீர் மட்டம் 52.73 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 19.57 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,968 கன அடியில் இருந்து 2,899 கன அடியாக குறைவு..

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 99.48 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 22.4 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 531 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 567 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.24 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.33 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 258 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget