மேலும் அறிய
வணிகர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் - வணிகர் சங்கத்தினர்
டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் வணிகர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரியில் வணிகர் சங்கத்தினர் வணிக வரித்துறை துணை ஆணையாளர்களிடம் மனு அளித்தனர்.
![வணிகர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் - வணிகர் சங்கத்தினர் Merchants' associations in Dharmapuri petitioned the Deputy Commissioner of Commercial Taxes to stop imposing heavy fines on traders in the name of test purchases வணிகர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் - வணிகர் சங்கத்தினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/ce42dd9a5d3ec1916b525aef7e5b776f1669715172388501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மனு கொடுக்க வந்த வணிகர் சங்கத்தினர்
டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் வணிகர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரியில் வணிகர் சங்கத்தினர் வணிக வரித்துறை துணை ஆணையாளர்களிடம் மனு அளித்தனர்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாக, டெஸ்ட் பர்சேஸ் முறையில் சொல்ல கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால் இதற்கு தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்த டெஸ்ட் பர்சேஸ் முறையில் மூலம் வணிக வரித்துறை அதிகாரிகள் சில்லறை விற்பனை செய்யும் வணிகர்களிடம் சென்று பொருட்கள் வாங்கி வருவதற்கான ரசீதை கேட்கின்றனர். அவ்வாறு கொடுக்காத கடைகளுக்கு டெஸ்ட் பர்சேஸ் என்ற முறையில் 20,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால் சில்லறை வணிகம் செய்யும், சிறு குறு வணிகர்கள் கூட பொருட்களை வாங்கும் போது அதற்கு உரிய வரி செலுத்தி அந்த பொருட்களை வாங்கி வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் வணிக வரித்துறை அதிகாரிகள் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற முறையில் பொருட்களை வாங்கியதற்கான ரசீதுகளை, வணககர்கள் வழங்கவில்லை எனக் கூறி, அபராதம் இருக்கின்றனர். எனவே இது வணிகர்களை பாதிக்கும், மேலும் வணிகர்களின் வாழ்வாதாரமே மிகப் பெரிய கேள்விக் குறியாகும் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
![வணிகர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் - வணிகர் சங்கத்தினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/8bea9e74c2089224350feeb8f7038d761669715290340501_original.jpg)
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அந்தந்த மாவட்ட வணிக வரித்துறை அலுவலகங்களில் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்தி வைக்க வேண்டும், ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேரடியாக சென்று மனு அளித்து வருகின்றனர். இதனை அடுத்து தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பேரணியாக சென்று, தருமபுரி வணிக வரித்துறை துணை ஆணையாளரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும் வணிகர்களை பாதிக்கின்ற இந்த டெஸ்ட் பர்சேஸ் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் வணிகர்களிடம் அதிக அளவு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அனைத்து வணிகர்களும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பை சேர்ந்த, அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், மாரண்டஹள்ளி பகுதியை சேர்ந்த நிர்வாகிகள், வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
வணிகம்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion