மேலும் அறிய

உள்ளாட்சி இடைத் தேர்தல்: தருமபுரியில் ஒரு வார்டு கவுன்சிலர் பதவிக்கு 12 பேர் வேட்புமனு

’’ஒரே ஒரு வார்டு கவுன்சிலர் பதவிக்கு நேற்று முன் தினம் வரை ஒரே ஒருவர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 11 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்’’

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், உள்ள மாவட்ட ஊராட்சி குழு 18 ஆவது வார்டு உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த தாமரைச்செல்வன், உடல்நலக் குறைவால் கடந்த ஆறு மாதங்களுக்கு உயிரிழந்தார். தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுவில், 18 ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே தேதியில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
 
 
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டு மலைவாழ் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தொடர்ந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளிகண்ணனிடம், கட்சி சார்ந்த, சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
 
 
நேற்று முன் தினம் வரை தமிழர் கட்சி வேட்பாளர் கல்லாத்துகாடு பகுதியை சேர்ந்த சசிகுமார், ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து கடைசி நாளான நேற்று அ.தி.மு.க., சார்பில் ஆவாரங்காட்டூரைச் சேர்ந்த கண்ணன், தி.மு.க., சார்பில் போட்டியிடும் நொனங்கனூரைச் சேர்ந்த லதா தாமரைச்செல்வன், பா.ம.க, சார்பில் சித்தேரியை சேர்ந்த ஸ்ரீகாந்த்,  அ,ம,மு,க, வேட்பாளராக கோம்பூரை சேர்ந்த ஜெயராமன், தே.மு.தி.க சார்பில் மாங்கடை பகுதியை சேர்ந்த குழந்தை, பா.ஜ.க சார்பில் தொம்பகலானூரைச் சேர்ந்த சக்தி உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
 
 
மேலும் சுயேட்சை  சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் ராமன், சாந்தி, குணசேகரன், இந்திராணி, சந்துரு என நேற்று ஒரே நாளில் மொத்தம் 12 பேர் தங்களது வேட்பு மனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளிகண்ணனிடம் தாக்கல் செய்தனர். தொடர்ந்து வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும். இந்த இடைத்தேர்தலால் பாப்பிரெட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூடி, பரபரப்பாகவே இருந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget