மேலும் அறிய

மூன்று மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்திய நந்திதேவா காளையின் இறப்பு.. ஏன் தெரியுமா?

நந்தி தேவாவை மாடுபிடி வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாக பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த காளை இறந்ததால் காளைக்கு முறையாக மாலைகள் அணித்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று நல்லடக்கம்

தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எவ்வுளவு பிரசித்தி பெற்றதோ, அதே போல் வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் எருது விடும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் எருதுவிடும் விழாக்களுக்கும் அந்த தடை நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கிய நிலையில் எருது விடும் விழாவுக்கான தடையும் நீங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் (58) கடந்த 2011 ஆம் ஆண்டு காளை ஒன்றை வாங்கி அதற்கு நந்தி தேவா என  பெயர் சூட்டி எருது விடும் விழாவிற்காக காளையை தயார் செய்து வந்துள்ளார். 

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த எருதுவிடும் விழாக்களில் கலந்து கொண்ட நந்தி தேவா மின்னல் வேகத்தில் மாடு பிடி வீரர்களிடம் சிக்காமல் சென்று முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல் தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் எருதாட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு நந்தி தேவா பெரும் வெற்றிகளை குவித்துள்ளது. 

மூன்று மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்திய நந்திதேவா காளையின் இறப்பு.. ஏன் தெரியுமா?

இதனால் நந்தி தேவா கலந்து கொள்ளக் கூடிய எருதாட்ட போட்டிகளில் காளையின் வேகத்தை பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதும். நந்தி தேவா காளையின் ஓட்டம் குதிரையின் வேகத்திற்கு நிகரானது என்பதால் இதுவரை நடந்த எந்த எருதுவிடும் நிகழ்ச்சிகளிலும் நந்திதேவாவை மாடுபிடி வீரர்கள் பிடித்ததில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காளை நந்திதேவாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. காளையின் உரிமையாளர் கோவிந்தன் கால்நடை மருத்துவரை கொண்டு பரிசோதித்ததில், நந்தி தேவாவுக்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்த கட்டியை இங்கு அகற்ற முடியாது என்பதால் காளைக்கு  சிகிச்சை அளிக்க வெளியூர் கொண்டு செல்ல ஏற்பாடு அதன் உரிமையாளர் கோவிந்தன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் காளை நந்தி தேவா திடீரென உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மூன்று மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்திய நந்திதேவா காளையின் இறப்பு.. ஏன் தெரியுமா?

நந்திதேவா காளை உயிரிழந்ததை அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இதையடுத்து. ஊருக்குள் செல்லப்பிள்ளையாக வலம் வந்த காளைக்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, மலர் மாலைகளால் அலங்கரித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நந்தி தேவா காளை உயிரிழந்த சம்பவம் காட்டுத்தீ போல் சுற்றியுள்ள வேலூர், திருவண்ணமலை, தருமபுரி மாவட்டங்களிலும் பரவியதையடுத்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் நந்திதேவாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நந்தி தேவாவை மாடுபிடி வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாக பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த காளை இறந்ததால் காளைக்கு முறையாக மாலைகள் அணித்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக கிராமத்தில் எடுத்து சென்று அதன் பிறகு இறுதி சடங்குகள் நடந்தன. தொடர் வெற்றி வீரனாக திகழ்ந்து வந்த காளை நந்தி தேவா உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget