மேலும் அறிய

ஓசூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி- மகிழ்ச்சியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்திய கிராம மக்கள்

கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஏரியை சுற்றி உள்ள விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல், வரண்டு மேட்டுப் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி உள்ளதால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஏரியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்தினர்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை அடுத்த சாரண்டப்பள்ளி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் தேக்கி வைப்பதால், விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கிறது.  இந்த நிலையில் ஏரிக்கான வரத்துக் கால்வாய்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் பருவமழை போதிய அளவில் பொறியாததாலும் நீரின்றி வறண்டு காணப்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஏரியை சுற்றி உள்ள விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல், வரண்டு மேட்டுப் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் ஓசூர் தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உடைந்து வெள்ளப்பெருக்கு எல்லாம் ஏற்பட்டது. இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி தண்ணீர் உபரியாக வெளியேறி வந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த சாரண்டப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து ஏரியில் தெப்பம் விட்டு திருவிழா கொண்டாடினர்.

ஓசூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு  நிரம்பிய ஏரி- மகிழ்ச்சியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்திய கிராம மக்கள்
 
முன்னதாக சாரண்டப்பள்ளி, காளேநட்டி ஆகிய கிராம மக்கள் மேள தாளங்களுடன் பூக்கரங்கங்களை ஊர்வலமாக கொண்டு வந்து சாரண்டப்பள்ளி பெரிய ஏரிக்கரையில் உள்ள வண்ணம்மா தேவி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வண்ணமாதேவியை அமர வைத்து ஏரி முழுவதும் சுற்றி வந்தனர். தொடர்ந்து தெப்பம் ஏரியில் மூன்று முறை சுற்றி வந்தது. மேலும் விவசாயம் செழிக்க வேண்டும், மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என அனைவரும் வேண்டி கொண்டனர்.

ஓசூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு  நிரம்பிய ஏரி- மகிழ்ச்சியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்திய கிராம மக்கள்
 
இந்த தெப்ப திருவிழாவில் சாரண்டப்பள்ளி, காளேனட்டி, நேரலட்டி, பாசப்பள்ளி, பள்ளப்பள்ளி, சென்னசந்திரம், மாயநாயகனப்பள்ளி, ஜோகட்டி, கக்கதாசம், மல்லசந்திரம், ஒசூர் அக்ரஹாரம், சாத்தி நாயகனப்பள்ளி, தேவர் உலிமங்கலம், பிபி.பாளையம், தாரவேந்திரம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தெப்ப விழாவை கண்டு ரசித்தனர். அப்பொழுது சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த மக்கள் அனைவருக்கும் ஆடு கோழி பலியிட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஹலோ திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget