மேலும் அறிய

டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப் போவதாக முத்தரசன் பேட்டி

வருகிற டிசம்பர் 29-ம் தேதி, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முற்றுகையிடப் போவதாக, தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி.

தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் இரா.மைத்தரசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முத்தரசன், “G 20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் இந்த G 20 மாநாடு கொடியில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாஜகவின் சின்னத்தை, G 20 மாநாட்டு கொடியில் பயன்படுத்தியது வேறு என்பது, ஏன் பிரதமர் மோடிக்கு தெரியாதா? 
 
தேர்தல் ஆணைய தலைவர் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி சாதாரணமானது இல்லை. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற 24 மணி நேரத்தில், அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அவசரம் என உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதற்கு பாஜக நேர்மையாக பதில் கொடுக்க வேண்டும். இதனை  நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும். தற்போது தேர்தல் ஆணையராக இருப்பவர்கள் பாஜகவின் கட்டளையை தீர்மானிப்பதாக தான் செயல்படுகிறார்கள். பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். மேலும் தேர்தல் தேதிகளை பாஜக தான் முடிவு செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. 
 
நம்முடைய  முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடுவை  பாராட்டி சென்னையில் விழா நடத்தப்பட்டது. அதில் வெங்கையா நாயுடு பேசும் போது, எந்த மொழியையும் திணிக்க கூடாது. இதனை நான் ஏற்கமாட்டேன்  என தெரிவித்துள்ளார். இதை வெங்கைய்யா நாயுடு பல முறை பேசியுள்ளார்.  ஆனால் காசி தமிழ்ச்சங்க விழாவில், அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவில், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு கொடுத்தள்ளனர். 
 
இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழை புகழ்ந்து பேசியுள்ளார். மோடியின் இந்த செயலை வரவேற்கிறேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், சமஸ்கிருதத்ததிற்கு ரூ.222 கோடி ஒதுக்கி விட்டு, தமிழுக்கு 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது உள்ளம் ஒன்று, உதடு ஒன்று பேசுகிறது.
 
டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப் போவதாக முத்தரசன் பேட்டி
 
தமிழக ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக நடத்துகிறார். இங்கு போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழக அரசு கொடுக்கின்ற மனுதாக்கல் கிடப்பில் உள்ளது. ஆனால் பிரதமர், குடியரசு தலைவர்கள் பாதுகாப்பு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொடர்பானது. ஆனால் பிரதமர் வரும்போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கிறார். இதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா-விடம் தான் கேட்க வேண்டும். ஆனால் ஆளுநரிடம், அண்ணாமலை கொடுக்கும் புகார் மீது உடனடியாக விளக்கம் கேட்டு, தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.  மேலும் ஆளுநர் ரவி, எல்லா நாடும் ஏதோ ஒரு மதத்தின் அடிப்படையில் இருக்கிறது. இந்தியா இந்து மதத்தை சார்ந்துள்ளது. புதிய கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும் என ஆளுநர் ரவி பேசி வருகிறார். இதனால் ஆளுநர் ரவியின் செயல்பாடு ஏற்புடையதல்ல. இதனால் வருகிற டிசம்பர் 29-ம், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை, பல்லாயிரக் கணக்கானோரை திரட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
Canada PM: ட்ரூடோ கதை ஓவர்..!  வந்ததுமே ட்ரம்பை அட்டாக் செய்த கனடாவின் புதிய பிரதமர் - யார் இந்த மார்க் கார்னி?
Canada PM: ட்ரூடோ கதை ஓவர்..! வந்ததுமே ட்ரம்பை அட்டாக் செய்த கனடாவின் புதிய பிரதமர் - யார் இந்த மார்க் கார்னி?
Sunita Williams: ஆளவிடுங்கடா சாமி..! 9 மாத விண்வெளி வாழ்க்கை ஓவர் - பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: ஆளவிடுங்கடா சாமி..! 9 மாத விண்வெளி வாழ்க்கை ஓவர் - பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
Canada PM: ட்ரூடோ கதை ஓவர்..!  வந்ததுமே ட்ரம்பை அட்டாக் செய்த கனடாவின் புதிய பிரதமர் - யார் இந்த மார்க் கார்னி?
Canada PM: ட்ரூடோ கதை ஓவர்..! வந்ததுமே ட்ரம்பை அட்டாக் செய்த கனடாவின் புதிய பிரதமர் - யார் இந்த மார்க் கார்னி?
Sunita Williams: ஆளவிடுங்கடா சாமி..! 9 மாத விண்வெளி வாழ்க்கை ஓவர் - பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: ஆளவிடுங்கடா சாமி..! 9 மாத விண்வெளி வாழ்க்கை ஓவர் - பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Embed widget