மேலும் அறிய

சேலத்தில் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு...

இன்று மாலை விநாயகர் சதுர்த்தி நிறைவுப் பகுதியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று இந்து முன்னணி அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சேலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயில் முன்பாக விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். முன்னதாக, முழக்கங்கள் எழுப்பியபடி விநாயகர் சிலை எடுத்துவரப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாநகர  காவல்துறை  துணை ஆணையாளர் மோகன்ராஜ் தலைமையில் காவல்துறையினர், விநாயகர் சிலையை அகற்றுமாறு இந்து முன்னணி அமைப்பினரிடம் அறிவுறுத்தினர். இதன் காரணமாக இருதரப்பினருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரசு உத்தரவின்படி சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் மீண்டும் எடுத்து கூறியதை அடுத்து 'விநாயகர் வாழ்க' கோஷம் எழுப்பியபடி விநாயகர் சிலையை எடுத்துச்சென்றனர். பின்பு அங்கிருந்த ஒரு கடையில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு சென்றனர். 

சேலத்தில் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு...

நேற்று நடந்த கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர், பதில் இன்று நடக்கவிருந்த விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமைதியான முறையில் தங்கள் வீடுகளில் கொண்டாடும்படி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தடையை மீறினால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி அபிநவ் கூறியிருந்தார். சேலம் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடமான சின்னக்கடை வீதி, பெரியக் கடைவீதி, செவ்வாய்பேட்டை, ராஜகணபதி கோவில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பட்டை கோவில், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அசம்பாவிதம் நடக்காத வகையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவிலில் காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை விநாயகர் சதுர்த்தி நிறைவுப் பகுதியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று இந்து முன்னணி அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget