மேலும் அறிய

காவிரி, தென் பெண்ணை ஆற்று பாசன திட்டங்களை நிறைவேற்றி தருக - தருமபுரி விவசாயிகள் கோரிக்கை

’’தருமபுரி மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக நடந்த விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்’’

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுடன் நேரடியான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் விவசாயிகளுக்கு  வழங்கப்படும் மானியங்கள் மற்றும் இடுபொருட்கள் குறித்தும்   அரசின் திட்டங்களை எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயி ஒருவர்,  தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அழியாளம் அணைக்கட்டிலிருந்து, தும்பலஅள்ளி கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு வரும் திட்டம் ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் இன்னும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் விவசாய பகுதிகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை துவக்கப்படாமல்  உள்ளது.
 
காவிரி, தென் பெண்ணை ஆற்று பாசன திட்டங்களை நிறைவேற்றி தருக - தருமபுரி விவசாயிகள் கோரிக்கை
 
எனவே கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரவை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலமாக ஒகேனக்கல்லில் இருந்து உபரி நீரை, பென்னாகரம் மடம் ஏரி பகுதிக்கு கொண்டு வந்து நிரப்பும் திட்டத்தை செயல் படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பிழைப்புக்காக வெளி மாநிலத்திற்கு செல்லும் அவல நிலை நீங்கி இங்கேயே வேலை செய்யும் நிலை ஏற்படும்.  எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற, நில அளவீடு செய்வதில் பல்வேறு குளறுபடிகள், தவறுகள் நடைபெறுகிறது. நில மேம்பாடு திட்டத்தின்படி உண்மையான நில அளவீடு செய்து உரிய ஆவணங்களை உருவாக்கி குளறுபடிகளை தவிர்க்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்திய தொகைக்கான இழப்பீடு, 2019 ஆம் ஆண்டிலிருந்து இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள காப்பீடு தொகையை  பெற்று தர வேண்டும் தெரிவித்தார்.
 
பென்னாகரம் பகுதியை சோ்ந்த விவசாயி ஒருவா், மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கோமாரி நோய் தாக்குதலால் மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வழங்க வேண்டுமென தெரிவித்தார்.  இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி கோமாரி நோய் தடுப்பூசி அனைத்து கால்நடைகளுக்கும், சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget