மேலும் அறிய

அமாவாசை என்ற பெயர் அவருக்குதான் பொருத்தமானது - இபிஎஸ் யாரை சொல்கிறார்?

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். இதுவரையில் தனியாக தான் இருந்து வருகிறோம்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, நேற்றைய தினம் நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தால் அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பொருளாதார நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் பேசும்போது நிதிநிலை குறித்து பேசி இருந்தேன் அதற்கு விளக்கம் அளிக்காமல் நேற்றைய தினம் மழுப்பலான பதிலை அறிக்கையின் வாயிலாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். அதிமுக அரசின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதிமுக அரசாங்கம் வருடம் வருடம் கடன் வாங்கி தமிழ்நாடு அரசே கடனாளியாக ஆக்கிவிட்டது என்று கூறி இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆட்சி பொறுப்பற்ற பிறகு கடன் வாங்கியதில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு என்று சாதனை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. எந்த சாதனையும் இல்லை கடன் வாங்குவதில் திமுக அரசு சாதனை அமைந்துள்ளது என்று கூறினார்.

அமாவாசை என்ற பெயர் அவருக்குதான் பொருத்தமானது - இபிஎஸ் யாரை சொல்கிறார்?

மேலும், அதிமுக ஆட்சியில் பெட்ரோல் மதுபான விற்பனை மூலமாக லாபத்தை விட திமுக பொறுப்பேற்ற பிறகு 23 லிருந்து 25 ஆம் ஆண்டு வரை பெட்ரோல் மதுபானம் 29ஆயிரம் கோடி கூடுதலாக அதிகரித்து உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டு காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேலாக வருமானம் வந்துள்ளது. அதிக அளவில் கடன் வாங்கியுள்ளீர்கள் அதிக மூலதன செலவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், புதிய திட்டங்களும் வரவில்லை. திமுக ஆட்சியில் வருமானம் அதிக அளவில் வந்துள்ளது மூலதன செலவும் குறைவாக செய்யப்பட்டுள்ளது. எந்த திட்டமும் கொண்டு வரவில்லை அப்படி இருக்கும்போது அந்த பணம் என்ன ஆனது. திமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மை சரியில்லை என்று குழு அமைத்தார்கள் இந்த குழு என்ன அறிக்கை கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து கேள்வி கேட்டதற்கு இன்னும் இதுவரை பதில் இல்லை. திமுக ஆட்சி முடிவதற்குள் 5 லட்சம் கோடி கடன் வாங்கி அதிக கடன்கள் வாங்கிய ஆட்சி என்று சாதனை படைத்து விடும். அதிமுக ஆட்சி காலத்தில் புயல் உள்ளிட்ட பல்வேறு சோதனையில் இருந்த போதும் அதிக செலவு செய்து கடன் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் என்றார்.

செந்தில் பாலாஜி அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் அவருக்கு பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார்கள் இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சியிலும் என்ற நபர் செந்தில் பாலாஜி. இவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும்போது திமுக ஆட்சி காலத்தில் ஆட்சி காலம் கலைந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான விசுவாசி என்றால் ஒரே கட்சியில் இருக்க வேண்டும். கட்சியை நேசித்தேன் அதனால் எனக்கு பொதுச்செயலாளர் என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையை கருதி வேடந்தாங்கல் பறவைகள் போன்று அவ்வப்போது வந்து செல்பவர்கள், இவர்கள் எல்லாம் எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என்று கூறினார்.

அமாவாசை என்ற பெயர் அவருக்குதான் பொருத்தமானது - இபிஎஸ் யாரை சொல்கிறார்?

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதற்கு முறையாக அமைச்சர் சேகர் பாபு பதில் அளிக்கவில்லை. பக்தர்களுக்கு கூறும் கருத்துக்களை உள்வாங்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பக்தர்கள் மனம் புண்படும்படி கருத்து கூறியது கண்டிக்கத்தக்கது. 

ஆண்டாண்டுகளுக்கு கடன் வாங்கிக் கொண்டு செல்வதால் எவ்வாறு திரும்பி செலுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். 

கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே முடிவு செய்யப்படும். தேர்தல் முடிந்தவுடன் கொள்கைகள் படி வெளியே சென்று விடுவார்கள். எதிர்க்கட்சி என்று வரும் போது ஆளும் கட்சியின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆளும் கட்சி தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் தான். மக்களுடைய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அரசின் கடமை. ஒவ்வொரு ஆட்சியில் நடைபெறும் குற்றங்களை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டும் போது அதை ஆளும் கட்சி ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். ஆனால் குற்றச்சாட்டுகளை கூறும் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் இதுவரையில் தனியாக தான் இருந்து வருகிறோம். அதிமுகவை பொருத்தவரை வேண்டுமென்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம். கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைக்கப்படுகிறது. எதிரிகள் வீழ்த்த வேண்டும் என்பதற்கு தான் கூட்டணி. கூட்டணிகள் கூறும் அனைத்திற்கும் தலையாட்டுவதற்கு அல்ல என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? தனித்துவமாகத் தெரிய டிப்ஸ்!
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? இதோ டிப்ஸ்!
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியாMaharashtra : Maharashtra Women Scheme.. பணத்தை திருப்பி கேட்ட அரசு! அதிர்ந்து போன பெண்கள்!Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? தனித்துவமாகத் தெரிய டிப்ஸ்!
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? இதோ டிப்ஸ்!
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
வீண் விரயம்; எதற்கு இந்த விளம்பரம்? இப்போது தனியார் பள்ளியிலுமா? - முதல்வருக்கு கேள்விகளை அடுக்கிய சீமான்
வீண் விரயம்; எதற்கு இந்த விளம்பரம்? இப்போது தனியார் பள்ளியிலுமா? - முதல்வருக்கு கேள்விகளை அடுக்கிய சீமான்
Donald Trump: ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள்... எந்த உத்தரவுன்னு தெரியுமா.?
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள்... எந்த உத்தரவுன்னு தெரியுமா.?
Gold Rate: சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
Savukku Shankar:
Savukku Shankar: "தப்பு பண்ணிட்டேன்! அப்படி பேசியிருக்கக் கூடாது" சவுக்கு சங்கரா இப்படி பேசிருக்காரு?
Embed widget