மேலும் அறிய
Advertisement
தொடர் மழை எதிரொலி - தருமபுரியில் பட்டுக்கூடு விலை கடும் சரிவு
’’தருமபுரி பட்டுக்கூடு அங்காடி வரலாற்றில் குறைந்தபட்ச பட்டுக்கூடு ஏலம் போனது நேற்று என்பது குறிப்பிடத்தக்கது’’
தருமபுரியில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடி தமிழகத்திலேயே மிகப் பெரிய பட்குக்கூடு ஏல அங்காடி. தருமபுரி பட்டுக்கூடு ஏல அங்காடியில் நல்ல விலை கிடைப்பதால், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஈரோடு, திருவண்ணாமலை, உடுமலைப்பேட்டை, கோபிசெட்டிபாளையம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர். கநாத அங்காடியில் தினந்தோறும் மஞ்சள் மற்றும் வெண் பட்டுக்கூடுகள் என 8 முதல் 12 டன் வரை பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகிறது. இங்கு பட்டுக்கூடு எடுத்து வரும் வெளியூர் விவசாயிகள் முதல் இரவே வந்து தங்கி ஏலத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த ஓராண்டாக கொரோனா பொதுமுடக்க காலத்தில், தருமபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு வெளியூர் விவசாயிகளின் வரத்து குறைந்து இருந்தது. இந்நிலையில் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் பட்டுக்கூடு வரத்து அதிகரித்து வந்தது. ஆனாலும் வெளி மாவட்ட விவசாயிகள் வருகை குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதங்களாக பெய்து வருவதால், ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெளியூரிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த மாதம் 25ஆம் தேதி 38 விவசாயிகள் வெறும் 2.5 கனபட்டுக்கூடுகள் மட்டுமே கொண்டு வந்திருந்தனர். மேலும் 26 ஆம் தேதி 19 விவசாயிகள் 851 கிலோ பட்டுக்கூடை கொண்டு வந்தனர். அதேப்போல் 27 ஆம் தேதி 13 விவசாயிகள் 654 கிலோ பட்டுக்கூடு எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று நான்கு விவசாயிகள் மட்டுமே பட்டுக்கூடு ஏலத்திற்கு வந்திருந்தனர். இதில் குறைந்தபட்சமாக 108 கிலோ வெண் பட்டுக்கூடுகள் மட்டுமே ஏலத்திற்கு வந்து இருந்தது. நேற்றைய ஏலத்தில் வெண் பட்டுக்கூடு ஒரு கிலோ அதிகபட்சமாக 591 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.566 சராசரியாக 581 ஏலம் போனது. தொடர்ந்து தருமபுரி பட்டுக்கூடு அங்காடி வரலாற்றில் குறைந்தபட்ச பட்டுக்கூடு ஏலம் போனது நேற்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வடகிழக்கு பருவமழை குறைந்து வருவதால், இனிவரும் நாட்களில் வெண் பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என பட்டுக்கூடு அங்காடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion