சிறுவனுக்கு சவாலான அறுவை சிகிச்சை... அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.!
சவாலான அறுவை சிகிச்சை மற்றும் நவீன விலை அதிகம் உள்ள மருந்துகள் மூலம் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வண்ணம் பாதுகாத்து உள்ளதாக டீன் தெரிவித்தார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஹீமோபிலேயே பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சவாலான அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையினை பல்வேறு குழுக்களுடன் இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்த கண் மருத்துவர் தேன்மொழி மற்றும் மருத்துவர்களுக்கு முதல்வர் தேவி மீனாள் பாராட்டு தெரிவித்தார்.
இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, சேலம் மாவட்டம் பண்ணப்பட்டி மாரகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வெங்கடேஷ். இவரது மகன் சூர்யா. இவர் நாலு வயது முதல் ஹீமோபிலியா என்னும் அறிவகை ரத்த உறையாமை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் கண் வீக்கத்துடன் சிவந்தும் மிக அதிக வலியுடன் சேலம் அரசு மருத்துவமனையின் கண் மருத்துவப் பிறவிக்கு கடந்த மாதம் வந்துள்ளார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரித்த போது மூணு வயதில் பட்டாசு வெடித்ததால் தனது கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை முற்றிலும் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கண்ணில் வீக்கம் வலியும் அதிகமாக இருந்து கொண்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது இடது கண் வீக்கம், கண் இமைகளில் வீக்கம் கருவிழி முழுதும் தழும்பு, வெண் படலம் மெலிந்து அதன் வழியே உள்ளிருக்கும் தசைகள் துருத்தி கொண்டிருத்தல் மற்றும் சிறுவயதில் இருந்து பார்வை முற்றிலுமாக இழந்திருத்தல் ஆகியவை கண்டறியப்பட்டது.
ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது சவாலானது. அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் வெண்படலம் கிழிந்து அதன் வழியே உள்ளிருக்கும் அதிக ரத்த ஓட்டம் உள்ள தசைகளில் இருந்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு அதனால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளியே வரும் தசைகளால் பார்வை உள்ள மற்றொரு கண்ணும் கிருமி தொற்று ஏற்பட்டு அக்கண்ணிலும் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாலு வருடங்களுக்கு முன்னர் ஹீமோபிலியா உள்ளவர்களுக்கு செலுத்தும் காரணி எட்டுக்கும் சக்தி ஏற்பட்டது. பிபா என்னும் மருந்தை செலுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி அறுவை சிகிச்சை துவங்கலாம் என இரத்தவியலாளர் மூலம் தெரிந்து கொண்ட பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தோம். அறுவை சிகிச்சை செய்த கண்ணில் குணமாகி இருந்ததால் வீட்டிற்கு செல்ல அனுமதித்தோம். இந்த சவாலான அறுவை சிகிச்சை மற்றும் நவீன விலை அதிகம் உள்ள மருந்துகள் மூலம் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வண்ணம் பாதுகாத்து உள்ளோம். இந்த சிறுவனுக்கு 37 லட்சத்தி 86 ஆயிரத்து 501 ரூபாய் மதிப்பில் பிபா ஊசி செலுத்தப்பட்டுள்ளது என சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் கூறினார்.
ஹச்.எம்.பி.வி வைரஸ் சேலத்திலும் பரவத் தொடங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களே இந்த வைரசால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் சளி, உடல் சோர்வு, காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படுவதாக கூறினார். இந்த வைரசால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது ஆனால் ஆஸ்துமா போன்ற இணை நோய்கள் உருவானால்தான் வைரஸின் பாதிப்பு அதிகமாக கூடும் என தெரிவித்தார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் அனைத்து வகை சுவாச மண்டல நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம், கை சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமும், கூட்டநெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலமும் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக தப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை கூடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )