மேலும் அறிய

‛ஏற்காடு வந்திடாதீங்க...’ பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

ஏற்காடு மலைப்பாதையில் பாதுகாப்பான போக்குவரத்துக்காக மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தற்போது வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது . கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள், அணைகள், வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் ஏரிகளில் அதிக நீர் வரத்து ஏற்பட்டு முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது.

‛ஏற்காடு வந்திடாதீங்க...’ பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

 எனவே பாதுகாப்பு கருதி மேற்படி நீர் நிலைகளில் குளிப்பது நீச்சல் பழகுவது, செல்பி எடுப்பது, ஆறுகளை கடப்பது, விளையாடுவது உள்ளிட்டவற்றை பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்காடு வட்டத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்காடு வட்டமலைப் பாதைகளில் ஆங்காங்கே நில சரிவுகள் ஏற்பட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழும் நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன .

இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இந்நேர்வுகளில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அத்தியாவசிய நோக்கம் இன்றி சுற்றுலா நோக்கில் ஏற்காட்டிக்கு செல்வதை தற்போதைய சூழலில் தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்காடு மலைப்பாதையில் பாதுகாப்பான போக்குவரத்துக்காக மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

‛ஏற்காடு வந்திடாதீங்க...’ பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

சுற்றுலாதளமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. சேலத்திலிருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் கடந்த மாதத்தில் இரண்டுமுறை மண்சரிவு ஏற்பட்டது. மேலும், மற்றொரு பிரதான சாலையான குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் 40 அடி பாலம் அருகே சுமார் 200 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த பாறையை அகற்றும் பணியில் அதிகாலை முதல் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். பெரிய அளவிலான பாறை என்பதால் உடைத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் பாறையில் வெடி வைத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 30 இடங்களில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டது.தொடர்ந்து வெடிக்கச் செய்த்ததில் பாறை வெடித்துச் சிதறியது. இதன்காரணமாக ஏற்காடு செல்லும் வாகனங்களுக்கு சுமார் மூன்று மணி நேரம் வரை தற்காலிமாக தடைவிதிக்கப்பட்டது. வெடித்துச்சிதறிய பாறை கற்களை பொக்லின் கொண்டு அகற்றும் பணியும் துரிதமாக நடைபெற்றது. தொடர்மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக பயணிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் முதல்வர் விஜய் சிலை! வாங்க குவியும் மக்கள் - எங்கு தெரியுமா?
மாஸ் காட்டும் முதல்வர் விஜய் சிலை! வாங்க குவியும் மக்கள் - எங்கு தெரியுமா?
70 கி.மீ. குறையும்... 2 மணி நேரம் மிச்சமாகும்! கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில் பாதை கோரிக்கை
70 கி.மீ. குறையும்... 2 மணி நேரம் மிச்சமாகும்! கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில் பாதை கோரிக்கை
சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைத்த தவெக அமைச்சர் - காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!
சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைத்த தவெக அமைச்சர் - காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!
சேலத்திற்கு வந்துள்ள புதிய ஆபத்து! குப்பை எரிசக்தி ஆலையால் காற்று மாசு, உடல்நல பாதிப்புகள் வருமாம்
சேலத்திற்கு வந்துள்ள புதிய ஆபத்து! குப்பை எரிசக்தி ஆலையால் காற்று மாசு, உடல்நல பாதிப்புகள் வருமாம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Embed widget