மேலும் அறிய
Advertisement
Dharmapuri: மாரண்டஹள்ளியில் சிறுத்தை நடமாட்டம்; வீட்டிற்கு வெளியில் உறங்க வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது, செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளனர்.
தருமபுரி: மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் உறங்கவும், கால்நடைகளை வெளியில் கட்டி வைக்க வேண்டாம் எனவும் பாலக்கோடு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மலை அடிவார கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊர்மக்கள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர், படகாண்டஹள்ளி, ஜனுப்பனூர் கிராமம் மலை பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடித்து சென்று உள்ளது. இந்நிலையில் திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்தை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனையடுத்து அதனை உற்று பாரத்த போது அது சிறுத்தை என தெரிய வந்துள்ளது. இதனைகண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது, செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்டஹள்ளி, ஜனுப்பனூர் பகுதியில் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும் இருக்கும் குடியிருப்புக்களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், மேலும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும். அதேபோல் வன விலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடி குண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion