மேலும் அறிய

தருமபுரி: ஊட்டியை போல் சீதோஷண நிலை கொண்ட வத்தல்மலை-கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க கோரிக்கை

’’வத்தல்மலை 24 கொண்டை ஊசி வளைவுகளுடன், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது’’

வத்தல்மலைக்கு பொதுமக்கள் வருகை அதிகரிப்பு-புதுப்பிக்கப்பட்ட சாலையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
 
தருமபுரி மாவட்டம் கொண்டகரஹள்ளி ஊராட்சிக்குட்ட வத்தல்மலை கிராமம் மலையின் உச்சியில  மீது அமைந்துள்ளது. இங்கு சின்னாங்காடு, கொட்லங்காடு, ஒன்றியங்காடு, பால்சிலம்பு, பெரியூர், நாயக்கனூர், மண்ணாங்குழி, குழியனூர் உள்ளிட்ட கிராமங்கள் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. வத்தல்மலை 24 கொண்டை ஊசி வளைவுகளுடன், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் பிரதானமாக விவசாய தொழிலை செய்து வருகின்றனர்.  மேலும் மலைப் பிரதேசம் என்பதால் ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற குளுமையான சூழல் நிலவி வருகிறது.  இதனால் விடுமுறை நாட்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வத்தல்மலைக்கு சுற்றுலா சென்று இயற்கை மற்றும் மலையின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.  மலை என்பதால், அடிக்கடி மழை பெய்து வருகிறது. அங்கு உள்ள மலையின் மீது மேகம் சூழ்ந்திருக்கும் அழகையும், இயற்கை சூழலையும் கண்டு ரசிக்கின்றனர்.
 
தருமபுரி: ஊட்டியை போல் சீதோஷண நிலை கொண்ட வத்தல்மலை-கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க கோரிக்கை
 
மேலும் ஆங்காங்கே உள்ள இடங்களில் குழு புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தோடு சிலர் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடுகின்றனர். ஆனால் மலை பிரதேசம் என்பதால், அடிக்கடி மழை வருவதும் இதனால் சாலை பழுதாகி வந்தது. தற்பொழுது மத்திய அரசின் பிரதம மந்திரி சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் 10.5 கோடி மதிப்பில் வத்தல்மலை மலை அடிவாரத்திலிருந்து மலை மீது வரை சாலை தரமான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய சாலை இருந்த போது, கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே சாலையோரம் தடுப்பு சுவர்கள் பாதுகாப்பாக இருந்தது.
 
தருமபுரி: ஊட்டியை போல் சீதோஷண நிலை கொண்ட வத்தல்மலை-கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க கோரிக்கை
 
தற்போது சாலை புதுப்பிக்கப்பட்ட போது, பழைய தடுப்பு சுவர்கள் வரை சாலை உயர்த்தப்பட்டு உள்ளது.  மேலும் புதியதாக ஒரு சில இடங்களில் மட்டுமே, தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் கொண்டை ஊசி வளைவுகளில் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.  தொடர்ந்து வத்தலைமலை அழகை கண்டு ரசிக்க இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் வரும் சில இளைஞர்கள் மலை பாதையில் இறங்கும் போது சாகசங்கள் செய்கின்றனர். இதனால் கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர் இல்லாததால், கொஞ்சம் தவறினாலும் கூட பெரும் விபத்துகள் நேரிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே வத்தல்மலை சாலையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget