மேலும் அறிய
Advertisement
தருமபுரி: முத்தம்பட்டி மலைப்பாதையில் தடம் புரண்ட ரயில் - ரயில் பாதை மீண்டும் சீரமைப்பு
நேற்று இரவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, இன்று முதல் தருமபுரி, சேலம் மார்க்கமாக ரயில்களை இயக்கவும், மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்க திட்டம்
கேரள மாநிலம் கண்ணணூரிலிருந்து பெங்களூரு அடுத்த யஷ்வந்த்பூர் நோக்கி பயணிகள் விரைவு ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை சேலம் ரயில் நிலையத்தை கடந்து பயணித்த ரயில் 3.50 மணியளவில் தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி பகுதி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தொடர் மழை காரணமாக ரயில் பாதையை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகளும் பெயர்ந்து ரயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கியதால் ரயில் என்ஜின் லேசாக தடம் புரண்டது. மேலும் என்ஜினை ஒட்டியுள்ள 7 பெட்டிகளும் தடம் புரண்டன. அதே நேரம் ரயில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அந்த தகவல் அறிந்த ரயில்வே துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தொடர் மழையிலும் ரயில் மீட்பு மற்றும் பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டநர். இது, ஒற்றை வழித்தட ரயில்பாதை என்பதால் அதிகாலை முதல் இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயிலின் பாதிக்கப்படாத ஏழு பெட்டிகள் வேறு இன்ஜின் மூலம் சேலம் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அதேபோல் முன்பக்கம் இருந்த மூன்று பெட்டிகள் தருமபுரி ரயில் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டது. இதில் இருந்த பயணிகள் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து பெங்களூர், ஈரோடு, சேலம் பகுதிகளிலிருந்து சீரமைப்பு பணிக்காக 400-க்கும் றேற்பட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்றது. இதில் பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களின் மூலம் ரயில் தண்டவாளத்தில் இருந்த பாறைகற்கள் அகற்றப்பட்டு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தின் மீது எடுத்து வைக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு பெட்டியாக இன்ஜின் மூலமாக இணைத்து, ஏழு பெட்டிகளும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு பிறகு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. மேலும் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் கற்கள் உடைந்து இருந்ததால், இரண்டு கற்களுக்கு இடையில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும், நேற்று இரவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, இன்று முதல் தருமபுரி, சேலம் மார்க்கமாக ரயில்களை இயக்கவும், மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே துறையினர் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த ரயில் தடம் புரண்டதால், மாற்று வழியில் பெங்களூரில் இருந்து சேலம் மார்க்கத்திற்கு ஜோலார்பேட்டை வழியில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion