மேலும் அறிய
Advertisement
ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
ஆசிரியர்கள் திட்டியதால், வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியில் சென்ற தகவலை, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கால தாமதமாக தெரிவித்துள்ளனர்.
தருமபுரி அடுத்த பழைய தருமபுரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடை உத்திரவு நீக்கப்பட்ட பிறகு தற்போது 100 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிட்டது.
இதனை அடுத்து தற்பொழுது பள்ளிகள் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் பாலக்கோடு அடுத்த சித்திரைபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோகிலவாணி மற்றும் காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஹள்ளி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரின் மகள் மேகா என்ற இருவரும் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் அந்த இரண்டு மாணவிகளும் பள்ளியின் சுற்றுச் சுவரை தாண்டி பள்ளியை விட்டு சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழுதபடியே பள்ளி வளாகத்தில் குவிந்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தருமபுரி முழுவதும் தேடினர். சுமார் 5 மணி நேர தேடலுக்கு பின் மாணவிகளை குண்டல்பட்டி என்ற இடத்தில் இருந்து காவல் துறையினர் மீட்டனர்.
தொடர்ந்து இரண்டு மாணவிகளையும் பெற்றோர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இந்த இரண்டு மாணவிகளையும், கட்டணம் செலுத்தவில்லை என ஆசிரியர்கள் திட்டியதால், வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியில் சென்ற தகவலை, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கால தாமதமாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிள்ளைகள் குறித்து கேட்டால், உரிய பதிலளிக்கவில்லை பெற்றோர்கள் தெரிவித்தனர். தனியார் மெட்ரிக் பள்ளியில் 2 மாணவிகள் காணாமல் சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அரூாில் உள்ள திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் படம் ரத்து- படத்தை வெளியிட ரசிகர்கள் கோாிக்கை.
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள திரையரங்கில் சூர்யாவின் நடிப்பில் இன்ற வெளியாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் காலைக் காட்சிகள் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில் பாமகவினர் திரைப்படத்தை அரூரில் உள்ள திரையரங்குகளில் திரையிட கூடாது என இரு தினங்களுக்கு முன்பு அரூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர்.
இதன் விளைவாக அரூரில் உள்ள திரையரங்கில் படம் வெளியானால், பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், திரையரங்கு நிர்வாகம், இன்று காட்சிகள் ரத்து செய்தனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன், ஆர்வமாக இருந்த சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அரூர் திரையரங்கில் சூர்யா நடித்த படத்தினை வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரூர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion